பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பிடியும் களிறும்

யாதொன்றும் வாய்வாளேன் நிற்பக் கடிது அகன்று கைமாறிக் “கைப்படுக்கப் பட்டாய், சிறுமி, ;ே மற்றுயான் ஏனைப் பிசாசருள் என்ன கலிதரின் இவ்வூர்ப் பலி பெருஅமல் கொள்வேன்' எனப்பலவும் தாங்காது வாய்ப்பாடி நிற்ப, முதுபார்ப்பான், அஞ்சின ளுதல் அறிந்துயான்

(வாய் வாளேன்-வாய் பேசாமல். கடிது-விரைவில் கைமாறி-தன் செயலிலே மாறி, கைப்படுக்கப்பட்டாய்கையிலே அகப்படுத்திக் கொள்ளப்பட்டாய்; சிக்கிக் கொண்டாய் என்றபடி, மற்று யான் என்றது நீ ஒருபி சாசு உன்னேயன்றி நானும் ஒரு பிசாசு என்பதைக் குறித்தது. நவிதரின்-துன்புறுத்தினுல். பவி-பேய் பெறும் உணவு. வாய் பாடி-வாயாற் பேசி.) தலைவி : நீ செய்ததைச் சொல்லவில்லையே!

தோழி : நான் குனிந்து ஒரு கை நிறைய மணலை எடுத்து

அவன்மேல் தூவினேன். தலைவி : வேடிக்கையாக இருக்கிறதே! அந்த மனிதன்

என்ன பண்ணிஞன்? தோழி : மணல் அவன் மேலே விழுந்ததோ இல்லையோ, ஒரேயடியாக அருண்டு போய்விட்டான். கடுமை யாகக் கூச்சல் போட்டுக் கத்தத் தொடங்கினன். ஊரெல்லாம் கேட்கும்படி கூவினன். .

. எஞ்சாது ஒருகை மணல்கொண்டு மேல்துவக் கண்டே கடிதுஅரற்றிப் பூசல் தொடங்கினன் ஆங்கே (எஞ்சாது-குறையாமல்; நிறைய. கடிது-கடுமை யாக. பூசல்-கூவுதல். ஆங்கே-அப்பொழுதே.1 . தலைவி. அந்தக் கூச்சலைக் கேட்டுயாராவது வந்து விட்

டார்களோ?