பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hið பிடியும் களிறும்

ஒடுங்கா வயத்திற் கொடுங்கேழ்க் கடுங்கண் இரும்புலி கொண்மார் கிறுத்த வலையுள்ஓர் ஏதில் குறுநரி பட்டற்றல், காதலன் காட்சி அழுங்ககம் ஊஉர்க் கெலாஅம் ஆகுல மாகி விளைதததை-என்றும்தன் வாழ்க்கை அதுவாகக் கொண்ட முதுபார்ப்பான் வீழ்க்கைப் பெருங்கருங் கூத்து. (ஒடுங்கா வய-அடங்காத வலிமை, கொடும் கேழ்வளைந்த கோடுகள்; கேழ்-நிறம்; இங்கே நிறமுள்ள வரிகள். சடுங்கண்-க மையான பார்வையையுடைய, கொண்மார் -பிடிப்பவர்கள். நிறுத்த-கட்டிவைத்த, ஏதில்-புவிக்கு அயலான. குறுநரி-குள்ள நரி. பட்டற்று-பட்டது போன் றது; ஆல்: அசை. காட்சி அழுங்க-நம்மைக் காணும் காட்சி தடைபட. ஆகுலம்-ஆரவாரம். விளைந்ததைவிளைந்ததாகிய, ஐ: சாரியை; பொருள் இல்லை. அது என் றது, பெண்களைக் கண்டு காம உணர்ச்சியால் மேல் விழு வதை வீழ்க்கை-விருப்பம்; சபலம். கருமை இழிவைக் குறித்தது. வேடிக்கையாக இருந்ததனால், கூத்து என்ருள்.) r

இந்த நிகழ்ச்சி தோழியாகக் கற்பனை பண்ணிக் கூறியது இப்படிச் சொன்னதைத் தலைவன் மறைவிலிருந்து கேட் டால், நம்மைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இவர்கள் வந்தும் அது முடியாமல் போயிற்றே!’ என்று வருந்துவான். பிறகு, களவாக வருவதல்ை இதுபோன்ற பல தடைகள் உண்டாகும். அதற்கு இடமின்றி இவளை மணந்துகொண்டு உலகறிய இவளுடன் வாழ்வதுதான் தக்க வழி என்பதை உணர்ந்து திருமண முயற்சியை மேற்கொள்வான். - -

இதனை எதிர்பார்த்தே தோழி தந்திரமாக இந்தச் செய்தியைப் படைத்து மொழிந்தாள்.

திருந்திழாய் கேளாய்: நம் ஊர்க்கெல்லாம் சாலுப் பெருங்கை அல்கல் நிகழ்ந்தது; ஒருதலையே மன்பதை எல்லாம் மடிந்த இருங்கங்குல்