பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பிடியும் களிறும்

வடித்து எழுதுகிருேம். மனிதனுக்கு இந்த அற்புத ஆற்றலைக் கடவுள் கொடுத்திருக்கிரு.ர்.

ஆனால், நாம் பேசும் மொழியும் எழுதும் எழுத்தும் நம்முடைய மனத்திலே தோன்றும் கருத்தை அறிவிக்கும் அடையாளமே ஒழிய, அந்தக் கருத்தின் வேறு உருவம் அல்ல. மனத்தில் தோன்றும் கருத்தும் உணர்ச்சியும் மனித சாதி முழுவதுக்கும் பொதுவானவை. அவற்றில் வேறுபாடில்லே. காரணம், மனம் என்ற ஒன்று உயிருக்கு அடுத்தபடி, காலம், இடம், சாதி, சமயம் என்ற பிரிவுக்கு அகப்படாமல் நிற்கிறது; அல்லது அவற்றிற்கெல்லாம் பொதுவாக நிற்கிறது என்று சொல்லலாம். அந்த மனத் தினுல்தான் மனிதனே வாழ்கிருன், தாழ்வடைகிருன் என்றும், மனமே மனிதனை ஆக்குகிறது என்றும் சொல்வது உண்டு. -

மனம் மனித சாதி அனைத்துக்கும் பொது; அதில் தோன்றும் கருத்துக்களும் உணர்ச்சிகளும் அப்படியே பொதுவானவை. அவற்றை வெளியிடும்போது மாத்திரம் அவை வெவ்வேறு வடிவம் கொள்கின்றன; மொழியாகிய ஒலி வடிவத்தை அடைகின்றன. அந்தக் கருத்துக்கள் ஒலி வடிவத்தை அடைகின்றன என்று சொல்வதை விட, அந்தக் கருத்துக்களே மக்கள் ஒலி வடிவமாகிய அடையா ளத்தால் வெளிப்படுத்துகிருர்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அப்படி ஒலி வடிவத்தில் வந்தவை பிறகு வரி வடிவத்தில் எழுத்தாக நிற்கின்றன.

எல்லா மக்களும் தங்கள் கருத்துக்களை ஒரே மாதிரி வெளிப்படுத்துவதில்லை. அப்படி இருந்தால் உலகம் முழுவதும் ஒரே மொழிதான் இருக்கும். தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு. பேசும் பாஷைகள் வேறு படுவதைப் போலவே எழுதும் எழுத்துக்களும் வேறுபடு கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் தனி மொழி, தனி