பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமான் 3

எழுத்து என்று இருப்பதில்லை. ஒரு கூட்டத்தினருக்குப் பொதுவான மொழி, பொதுவான எழுத்து என்ற நியதி இருக்கிறது.

மனிதன் நினைத்ததையும் உணர்ந்ததையும் முற்றும் சரியாகப் பேசுகிருன் என்று சொல்ல முடியாது. நினைத்த தையே பேசுவதானுல் நினைத்தது அவ்வளவையும் பேசி விடலாம்; ஒரு பாத்திரத்தில் உள்ள பண்டத்தை வேறு பாத்திரத்திற்கு மாற்றுவது போல மனத்திலுள்ளதை வாக்குக்கு மாற்றிவிடலாம். பேச்சு, நினைப்புக்கும் உணர்ச்சிக்கும் அறிகுறியே ஒழிய நினைப்பே ஆகாது. அதல்ை நினைத்ததை அப்படியே பேச்சில் வடித்துவிட முடியாது. பேச்சுக்குள் அகப்படாத நினைப்பு உண்டு; அகப்பட்டவையும் நினைப்பின் முழு இயல்போடு வெளிப் படுவதில்லை. ஆளுலும் நினைப்பையும் உணர்ச்சியையும் கூடியவரையில் பேச்சாகிய அடையாளத்தால் வெளிப் படுத்துகிருேம். பல பல ஆண்டுகளாகப் பல பல மனிதர் கள் பழகிப் பழகி மொழியாகிய அடையாளத்தை, நினைப் பின் பெரும் பகுதியை வெளியிடும் ஆற்றல் உள்ளதாகச் செய்து வருகிருர்கள். ஆனலுங்கூட நினைப்பு அவ்வளவை யும் பேச்சாக மாற்றுவது முடியாத காரியம்.

மற்ருெரு கருத்து: ஒருவர் பேசும்போது அதைக் கேட்ட நாம் அவருடைய நினைப்பையும் உணர்ச்சியையும் நன்முக அறிந்து கொள்கிருேம். அவரைப் போலவே, சில சமயங்களில் உணர்கிருேம். அப்படி இருக்க, மொழியால் உணர்ச்சியின் ஆற்றலை அப்படியே வெளியிட முடியாது என்பது எப்படி உண்மையாகும்? இப்படி ஒர் ஐயம் எழ லாம். நாம் ஒருவர் பேசுவதைக் கேட்கிருேம்; அவர் கூறும் வார்த்தைகளின் நேர்முகமான பொருளால் மட்டும் பேசுபவரது கருத்தையும் உணர்ச்சியையும் உணர்வ தில்லை நாமும் அவரைப் போலக் கருதி உணர்ந்திருப்ப தால் அவர் பேசிய பேச்சாகிய குறிப்பை வைத்துக்