பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பிடியும் களிறும்

கொண்டு, சொந்த அநுபவத்தால் ஊகித்து அவருடைய உள்ளத்தை உணர்ந்து கொள்கிருேம். பேச்சு வெறும் அடையாளமே ஒழிய உணர்ச்சியின் மறு உருவம் ஆகாது.

இதே போல, பேசும் பேச்சை எழுத்தில் வடிக்கும் போதும் பேச்சின் ஆற்றல் முழுவதையும் எழுத்தில் கொண்டுவர முடிவதில்லை. சில ஒலிகளே எழுத்திலே எழுத முடியாது. பேசும்போது நாம் உணர்ச்சி வேகத் தால் வெளிப்படுத்தும் தொனி பேதங்களையும், விரைவு மிகுதியையும், குறைவையும் எழுத்தில் வெளியிட முடியாது.

மனத்துக்கு உட்பட்ட கருத்துக்களையும் உணர்ச்சி களையும் பேச்சு என்னும் அடையாளத்தில் வடிப்பதி லும், எழுத்து என்னும் அறிகுறியில் வடிப்பதிலும் குறைபாடு உண்டு; அவற்றில் முழுமையைக் காண முடியாது. அதற்காகப் பேசாமல் எழுதாமல் இருந்து விட முடியுமா? அவற்றை அடையாளமாகக் கொண்டு நம்முடைய அறிவாற்றலாலும் உணர்ச்சிச் சிறப்பாலும் ஒருவாறு கருத்தை வெளியிட்டும் அறிந்து கொண்டும் வருகிருேம்.

கடவுள் மனத்துக்கும் வாக்குக்கும் எட்டாதவர். ஆலுைம் அவருடைய திருவருளைப் பெறுவதற்கு மக்கள் முயல்கின்ருர்கள். மனத்தில் நிகழ்பவற்றைப் பேச்சாகவும் பின்பு எழுத்தாகவும் வடிவமைத்தவர்கள் அல்லவா? கடவுளையும் அப்படி இரண்டு படி கீழே இறக்குகிருர்கள்; கடவுளே நேர் முகமாக அறிய ஒண்ணுது; ஆதலின் மனத்தில் நினைக்கும் நிலைக்கு அவரை இறக்கினர்கள்; அன்ட். யாவT வகை 1#r ல் தியானம் செய்தார்கள். பிறகு புறக்கண்ணிற்குக் காணலாம்படி உருவமும், காதுக்குக் கேட்கும்படி