பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமான் 7

மூர்த்திகளை வழிபடுகிருர்கள். வைணவர்கள் திருமால், திருமகள் முதலிய மூர்த்திகளை வழிபடுகிருச்கள். அந்த அந்த மூர்த்திகளின் திருவுருவங்களும் திருவிளையாடல் பல பலவாக விரிந்திருக்கின்றன. சிவ வழிபாடும் திருமால் வழிபாடும் தமிழ் நாட்டில் மிக மிகப் பழங்கால முதலே இருந்து வருகின்றன. சங்க காலத்து நூல்களில் இந்தக் கடவுளரின் புகழைப் பல இடங்களில் காணலாம். எட்டுத் தொகை நூல்களில் ஒவ்வொன்றுக்ரும் கடவுள் வாழ்த்து இருக்கிறது. கலித்தொகை என்னும் நூலில் உள்ள கடவுள் வாழ்த்துச் சிவபிரானப் பற்றியது; கவ்வங்துவளுர் பாடியது. சிவபிரானுடைய திருக்கோலங்களில் சிலவற் றையும் திருவிளையாடல்களில் சிலவற்றையும் அந்தப் பாட் டில் அவர் சொல்லுகிரு.ர்.

இந்த உருவங்களும் செயல்களும் அடையாள வகை யினுல் கடவுளை நினைக்கப் பயன்படுவன; அறிகுறிகளாக நிற்பன. சிவபெருமான் சொல்லால் அளந்து எல்லே கட்ட முடியாதவன்; மனத்தால் எட்ட அரியவன். ஆலுைம் அடியார்களுக்கு அருள் செய்யும் பொருட்டுத் திருவுருவங் கொண்டு திருவிளையாட்டயர்கிருன்.

நாம் எப்படிக் கூறினுலும் அதற்கு அப்பால் நிற்கிருன்; எப்படிக் குறித்தாலும், கருதின லும் அதற்கு மேலும் செல்கிருன். அவன் கூறப்படாத பொருள்; கூருமல் உள்ள பொருள். குறித்ததன் மேற்செல்லும் பரம்பொருள். ஆனலும் அவனை உருவாலும் செயலாலும் அடையாள மிட்டு வழிபடுகிருேம். -

அவனுடைய பரிவாரங்கள் llJfrrf தெரியுமா தேவர்கள் பலர் அவனுடைய திருவருளுக்கு ஏங்கி நிற்கிருர்கள். ஆனலும் அவன் தனக்கு உரிய சுற்றத் தாராகப் பேய்களைக் கொண்டிருக்கிருன்; கடுமையான பேய்கள்; கடுங்கூளிகள். உயர் குணம் உடையவர்களை