பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பிடியும் களிறும்

வழிக்குக் கொண்டுவருதல் சிறப்பு அன்று; அவர்கள் தம்முடைய இயல்பினலேயே நன்மையை அடைகிருர் கள். இழிகுணம் உடையவர்களைத் திருத்தி வழிப்படுத் துவதுதான் அருமை. இழிந்தவர்களோடு சேரும் ஒருவன் மன வலியில்லாதவளுக இருந்தால் அவனும் அவர்களுடைய சார்பினுல் கெட்டுப்போவான். அவர் களிடையே பழகியும் கெடாமல் இருக்க மன வலிமை; மிகுதியாக வேண்டும். அவர்களோடு பழகி அவர்களே வழிக்குக் கொணரவோ மனவலியும் பேராற்றலும் வேண்டும். சிவபெருமான் தன்னுடைய அருளாற்றலால் கூளிகளையும் ஒன்று கூட்டித் தன் ஏவலுக்குப் பயன் படுத்திக் கொள்கிருன், தான் ஆடும்போது அவைகளையும் ஆடிக் களிக்கச் செய்கிருன். பிற இடங்களில் நல்லவர் களோடு போரிட்டுக் கேட்டை உண்டாக்குவது கூளி களின் இயல்பு. இறைவளுேடு சார்ந்த பேய்களோ, இறைவனைச் சார்ந்த நல்லவர்களுக்குத் தீமை புரிபவர்களை அவன் ஏவலின்படி சென்று போர் புரிந்து அழிக்கும் தன்மையை உடையவை. இறைவன் திருக்குறிப்பை அறிந்து விரைவாகச் சென்று தீயவர்களோடு போரிட்டு, புறங்காட்டாமல்-மாருமல்-வெற்றி கொள்ளும் இயல்பை உடையவை. இவ்வாறு கூளிகள் செய்யும் நல்ல போர்கள் இறைவன் ஏவலால் நடைபெறுகின்றன; அவன் ஏவி நடத்தும் போர். அவை; ஆகவே அவன் கடுங்கூளிகள் இயற்றும் மாருப் போரை உடையவன்.

சிவபெருமானுடைய திருவுருவம் செக்கச் செவே லென்று இருப்பது. அவனுடைய சடாபாரம் கூடச் சிவப் பானதுதான். அந்தச் சிவப்புப் பிழம்பை நோக்கும் போது நம் கண்ணில் பளிச்சென்று தெரிவது அதனி டையே தோன்றும் கருமைதான். சிவப்புக்கு நடுவே சிறு கறுப்புத் தெரிகிறது. நீல மணிபோலப் பளபளக்கிறது. அது வேறு ஒன்றும் அன்று. இறைவனுடைய திருக்கழுத்து நீல மணி போன்ற அழகிய மிடறு, நீலகண்டன் என்ற