பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமான் 9

திருநாமம் உடையவன் இறைவன். தேர்வகள் அமுதம் கடைந்தபோது பாற்கடலில் எழுந்த ஆலகாலம் என்னும் நஞ்சைக் கண்டு அவர்களெல்லாம் அஞ்சி நடுங்கி ஓடி வந்தார்கள். அந்த ஆலத்தை அடக்காவிட் -ால் அது தேவர்களையெல்லாம் படுகுர்ணமாக்கிவிடும் என்று தோன்றியது. சிவபிரான் அந்த நஞ்சை உண்டு திருக் கழுத்திலே தேக்கிக் கொண்டான். அது அந்தக் கழுத்தில் நீல மணி போல நிற்கிறது; அமரர்களுக்கு வாழ்வளித்த பெருங்கருணை புடையவன் சிவபெருமான் என்பதை நினை வுறுத்திக் கொண்டு விளங்குகிறது. ஒரு முறை அவன் திருவுருவத்தை நினைத்தாலும் பார்த்தாலும் அந்தச் செம்மைப் பிழம்பினிடையே பளிச்சென்று மணி மிடறு தெரிகிறது. ஒரே செஞ்சோதியாக இருப்பதால் மற்ற உறுப்புக்களை மெல்ல நிதானித்துப் பார்க்க வேண்டும். ஆனல் மணிமிடருே வேறு நிறமாக இருப்பதால் விளக்க பாகத் தெரிகிறது.

மணிமிடற்றுப் பெருமானுக்கு எட்டுத் திருக்கரங்கள் உண்டு. எண்டோள் வீசி ஆடும் பிரான் அவன். தி க்குக் களே இறைவனுடைய கைகளாக இருக்கின்றன. அதனுல் எட்டுக் கைகளை உடையவன் என்று நூல்கள் சொல் கின்றன. எட்டுத் திக்கிலிருந்தும் அடியவர்கள் வந்தால் அங்கங்கே அப்படி அப்படியே நிறுத்தி, 'இந்தாருங்கள்!" என்று அருளே வழங்கும் வண்மை படைத்தன. அவை. ஒரு வீட்டுக்கு நான்கு புறமும் வாயில்கள் இருந்தால் எந்தப் பக்கத்தில் வந்தாலும் நேரே வீட்டுக்குள் நுழைய லாம், வாயில் எங்கே இருக்கிறது என்று கேட்டுத் தொல்லே புற வேண்டாம். மதுரை முதலிய ஊர்களில் உள்ள திருக்கோயில்களுக்கு நான்கு புறமும் வாயில்கள் உண்டு. எங்கிருந்து வந்தாலும் கோயில்களுக்குள் தடை யின்றிப் புகலாம். இறைவன் திருக்கரங்கள் யார் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொண்டு அருள் புரிய ஆயத்தமாக இருப்பதைக் காட்டுகின்றன. அவனுடைய