பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமான் 1 :

வையும் வேதத்தின் மூலம் வெளிப்படுத்தினுன் வேதம் ஆதி நூல், இறை நூல் என்று சொல்லப் பெறும். அதன் பால் பல இரகசியங்கள் அமைந்துள்ளன. நமக்கு விளங் காத பல செய்திகளை வேதம் விளக்குகிறது. அப்படி மறைந்த பொருள் உடைமையின் மறை என்ற பெயரு டையது வேதத்தை நான்கு என்று சொல்வார்கள். அந்த நான்கிலும் தனித்தனியே பல கிளைகள் உண்டு. இறைவனிடமிருந்து வந்தமையால் வேதத்தை ஒன்ருகச் சொல்வார்கள்; அது நான்காக வகுக்கப் பெற்றமையால் நான்மறையென்றும் சொல் வார்கள்; கிளைகளாகிய சாகை கள் பல இருப்பதால் பல மறைகள் என்றும் கூறுவதுண்டு.

வேதங்கள் மிகப் பழமையான வை. அவை ஏனைய நூல்களைப்போல வைத்துப் பொருள் செய்ய இயலா தவை அவற்றை நன்ரு கத் தெளிவதற்குத் துணையாக ஆறு நூல்கள் இருக்கின்றன. வேதத்தை நன்கு உணர இந்த ஆறு நூல்களும் பயன்படுகின்றன. ஆறு சாஸ்திரங்களும் வேதத்திற்கு அங்கங்கள்; ஆதலின் அவற்றை ஆறு அங்கம் என்று சொல்வார்கள்.

வேதத்தின் எழுத்து, அதனுடைய ஒலி முதலியவற் றைப் பற்றிச் சொல்வது சிட்சை, இது வேதத்துக்கு மூக்கைப் போன்றது. சொற்களின் இலக்கணத்தை ஆராய்வது வியாகரணம்; இது வேதத்துக்கு முகம் செய்யுள் இலக்கணத்தைச் சொல்வது சந்தம்; இது வேதத்தின் தாள். வேதத்தில் சொல்லப் பெற்ற செயல் களைச் செய்யும் காலம் முதலியவற்றைச் தெரிந்து கொள்ளக் கோள் நிலை முதலியவற்றைச் சொல்வது சோதிடம்; இது வேதத்தின் கண். வேதச்சொற்களுக்கு நிகண்டுபோலப் பொருள் கூறுவது நிருக்தம்; இது வேதத் தின் செவி. கல்பம் என்பது செயல் முறைகளைத் தெரி விக்கும் நூல்; இது வேதத்தின் கை. வேதமென்னும் புருஷனுக்கு இப்படி ஆறு அங்கங்கள் உள்ளன.