பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமான் 15

ஆண்டவன் தன் நகையில்ை எரித்தான். மூன்று மலங் களாகிய பகையை அழிப்பவன் அவன் என்பதை இக் கதை கருதுகிறது என்பார்கள். காரணம், சூக்குமம், துாலம் என்ற மூன்று உடம்புகளையும் அழித்து முத்தி தருபவன் என்பதை இப் படிக் கதையாகச் சொல்கிறது புராணம் என்றும் சொல்வது உண்டு.

தமக்குக் கிடைத்த வளப்பங்களைக் கொண்டு பிறருக்கே நன்மை செய்கிறவர்கள் தெய்வத்தோடு ஒத்தவர்கள்; தமக்குக் கிடைந்தவற்றைக் கொண்டு தாமும் வாழ்ந்து பிறரும் வாழ வகை செய்கிறவர்கள் மனிதப் பண்பு உடையவர்கள்; அவற்றைக் கொண்டு தாமே வாழவும் பிறர் இன்னலுறவும் வகை செய்வார் அசுரர். அத்தகையவர்களே இறைவன் அருள் அணு காது. முப்புரம் எரித்த கதை இந்தக் கருத் தையே புலப்படுத்துவதாகவும் கொள்ளலாம். எவ் வாறு கொண்டாலும் சிவபிரான், கூடாத இயல்புகளே அகற்றுபவன் என்பது எல்லாவற்றிற்கும் பொதுவாக நிற்கும். அந்தணருக்கு மறை பகர்ந்தவன் என்றும், நீரைச் சடையிற் கரந்தான் என்றும், திரிபுரம் தீ மடுத் தான் என்றும் நினைக்கவும் பேசவும் அமைந்த இறைவன் உண்மையில் கூருத தன்மையினன்; மனத்தால் குறிக்க இயலாத இயல்பினன். ஆயினும் அவனே மேலே சொன்ன செயலைச் செய்தவனுகவும், கூளிகளால் திகழும் மாருப் போரை உடையவனுகவும், மணிமிடறும் எண் கையும் உடையவளுகவும் அன்டர்கள் கொண்டாடிப் பயன் பெறுகிரு.ர்கள்.

அந்தச் சிவபெருமான நேர்முகமாக விளித்து, "அடியேன் உள்ளத்தே தோன்றிய வியப்பை விண்ணப் பித்துக் கொள்கிறேன். அதனை இப்போது கேட்டருள வேண்டும்’ என்று நவ்வந்துவளுர் தொடங்குகிரு.ர்.