பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 பிடியும் களிறும்

ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல்பகர்ந்து, தேறுநீர் சடைக்கரந்து, திரிபுரம் தீமடுத்துக் கூருமற் குறித்ததன்மேற் செல்லும் கடுங்கூளி மாருப்போர் மணிமிடற்று எண்கையாய் கேள்இனி.

(வேதத்தின் அங்கங்களாகிய ஆறு நூல்களையும் நன்கு அறிந்த அந்தனாகளுக்குத் தெளிவதற்கு அரிய மறைகள் பலவற்றைத் திருவாய் மலர்ந்தருளி, தெளிந்த கங்கை நீரைச் சடையிவே மறைத்தருளி, முப்புரங்களைத் தீயினுல் எரித்து, லாக்கினுற் கூறமுடியாமல் மனத்தினுல் நினைக்கும் எல்லைக்கு மேலும் போகின்ற தன்மையையுடைய, வேக மாகிய பேய்களால் நிகழும் புறங்கொடாத போரையும் நீல மணிபோன்ற மிடற்றையும் எட்டுக் கையையும் உடைய பெருமானே, அடியேன் வியப்பினுல் கூறும் விண்ணப்பத்தை இப்போது கேட்டருள்வாயாக.

ஆறு - ஆறங்கம், அந்தணர் - முனிவர். தேறு - தெளிந்த, கரந்து - மறைத்து. தீ மடுத்து - தீயில் எரியச் சேய்து, கூளி பேய்கள். மாருப்போர் - பின் வாங்காமல் வெற்றிபெறும் போர். மணி - நீல மணி. மிடறு- கழுத்து. இனி - இப்பொழுது.

பகர்ந்து கரந்து மடுத்துச் செல்லும் பெருமானே கேள் என்று வினைமுடிவு செய்துகொள்ள வேண்டும்.)

தேறு நீர் சடைக் கரந்து என்பதற்கு, "பகையென்று தெளிகின்ற கங்கையின் வேகத்தைச் சடையில் ஒரு கூற்றிலே அடக்கி’ என்று நச்சினர்க்கினியர் உரை எழுதினர்.

புலவருக்கு எதைக் கண்டு வியப்புத் தோன்றியது? அவர் இறைவனுடைய திருக்கூத்தை நினைந்து வியப்