பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமான் 17

படைகிருர், இறைவனுடைய கூத்தைப் பல நூல்கள் சொல்லுகின்றன. அவனுடைய கூத்து ஒன்றல்ல, இரண்டல்ல; கணக்கில் அடங்காத வகைகள் உண்டு.

அவற்றுள் கொடு கொட்டி, பாண்டரங்கம்,காபாலம் என்ற மூன்று கூத்துக்களைப் புலவர் வியந்து பாராட்டுகிருர், உலகத்தை யெல்லாம் ஆட்டி வைப் பவன் இறைவன். அவனுடைய நடனமே அவன் செய்யும் தொழில்களை விளக்குவது என்று அறிஞர் சொல்வர். உலகத்தைப் படைத்தலும், காத்தலும், அழித்தலும், மறைத்தலும், அருளுதலும் ஆகிய ஐந்து தொழில்களையும் இறைவன் இயற்றுகிருன். அந்தத் தொழில்கள் மனம் போனபடி நிகழ்வன. அல்ல. இறைவனுடைய அருளாணேயால் நிகழ்வன. ஆதலின் அவற்றிற்கு ஒர் ஒழுங்கு உண்டு. அந்த ஒழுங்குக்குள் நின்றே சூரியன் தோன்றுகிருன், மறைகிருன்; சந்திரன் தேய்கிருன், வளர்கிருன்; காற்று வெம்மையாகவும் தண்மையாகவும் வீசுகிறது; வேப்ப மரத்தில் வேப்பிலேயே தளிர்க்கிறது; அானை யானையையே பெறுகிறது. கடல் கரை கடவாமையும் உயிர் உடம்பில் வரையறுத்த காலம் வரையில் தங்குவதும் ஆகிய செயல்கள் யாவும் அந்த ஒழுங்கின்படியே நிகழ்கின்றன. நடனம் என்பது உடம்பில் நிகழும் செயல்கள் அனைத்தும் ஒழுங்குக்கு உட்பட்டு அமைவது. அந்த ஒழுங்குக்குத் தாளம் அல்லது லயம் என்று பெயர். கையின் அசைவு, காலால் மிதிக்கும் ஜதி, கண்ணின் பார்வ்ை, உடம்பின் நெளிவு, வாயில் வரும் பாட்டு இத்தனையும் ஒரு தாளக் கட்டுப் பாட்டைச் சார்ந்தே அமையும். இறைவன் இயற்றிய பிரபஞ்சம் முழுவதும் அவனது அருளான யாகிய லயத் தைச் சார்ந்தே இயங்குகிறது. ஆகவே அவன் செயல் எல்லாவற்றிலும் ஒழுங்கு உண்டு; லயம் உண்டு. அதனல் அந்தச் செயல்களையே கூத்தாக வைத்து அதனை நினைந்து பாராட்டி வழிபடக் கூத்தப்பிரானக அவனே உருவகம்

பி.டி.--2