பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பிடியும் களிறும்

செய்தார்கள். அவன் அருளே கண்ணுகக் காட்ட, நடராசனுகவே கண்டு களித்தார்கள், அருளில் மூழ்கிய பெரியோர்கள்.

இந்தக் கூத்தின் இயல்பை நினைக்க நினைக்க இன்பம் பொங்குகிறது. இறைவனுடைய தத்துவத்தை உட்கருத் தாக வைத்துக் காட்டிய கூத்துக் கோலத்தின் கலையழகே இன்று உலகம் முழுவதும் போற்றும் வகையில் இருக் கிறது. வேறு எந்த நாட்டிலும் நடராச விக்கிரகத்தைக் கான முடியாது. தமிழ் நாட்டின் தனிச் சொத்து அது. சைவர்களுக்கு எத்தனையோ கோயில்கள் இருந்தாலும் அவற்றிற்குள் தலைமையுள்ளதாகவும், கோயில் என்று அடையின்றிச் சொன்னலே தெரிந்து கொள்ளும் தலமாக வும் இருப்பது சிதம்பரம். அதற்குக் காரணம் அங்கே திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் நடராசப் பெரு மானுடைய சிறப்பே யாகும்

கலேவகையில் கண்டுகளிப்பது நடராசன் திருவுருவம்; இடம், காலம், சாதி, சமயம் என்ற வரையறை யாதும் இல்லாமல் நடராசப் பெருமானுடைய ஆடல் திருக் கோலத்தைக் கலேப்பொருளாக மக்கள் கண்டு களிக்க லாம். சிற்பக் கலையும், நடனக் கலேயும் அந்தத் திருவுரு வத்தில் உன்னத நிலையை அடைந்திருக்கின்றன. மந்திர சாத்திரக் கருத்துக்களின் அடையாளமாக அந்தத் திருக் கோலத்துக்குப் பொருள் விரிக்கிறவர்கள் உண்டு. யோக நூலின் படி நடராசத் திருவுருவத்துக்கு உள்ளுறை கூறு வாரும் உண்டு. ஞான நூல்களின்படி அந்த மூர்த்தியின் உண்மையை விரிப்பவர்களும் உண்டு. புராணங்களைக் கொண்டு கதை சொல்லி அதன் சிறப்பை எடுத்துக் கூறு வாரும் உண்டு.

இறைவன் உலகத்தைப் படைத்துக் காத்து அழித்து மறைத்து அருள் செய்யும் தொழிலுடையவன். இதனை உட்கருத்தாகக் கொண்ட நடனத்தை ஐந்தொழிற் கூத்து