பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமான் 19

அல்லது பஞ்ச கிருத்திய நடனம் என்பார்கள். உலகமும் உயிரும் இயங்குகின்றன; அவன் தானே இயங்கி அவற்றை இயக்கு கிருன்; அவ்வாறு இயக்குவதற்குக் காரணம் உயிர்களிடம் அவனுக்கு உள்ள கருணையே. அவன் உள்ளத்திலே கருணை சுரக்கிறது; அதனுல் அவன் ஆடுகிருன்; அந்த ஆட்டத்தால் உலகை ஆட்டுகிருன். உலகம் ஆடுவதற்கு அவன் ஆட்டம் காரணம். அவன் ஆட்டத்துக்கு அவன் அருளான காரணம். அந்த அருளே எல்லா ஆட்டத்திலும் ஓர் ஒழுங்கை, வரை யறையை, லயத்தை, தாளத்தை அமைத்திருக்கிறது.

இந்தத் தத்துவத்தை உருவாக்கி வைத்திருக்கிருர் கள். இறைவன் ஆடுகிருன். அதற்கு உமாதேவி தாளம் கொட்டுகிருள். உமாதேவியாகிய சக்தி இறைவனுடைய அருள். அந்த அருளேயே சக்தியென்று உருவமைத்து வழிபடுகிருேம். இறைவன் பால் உள்ள ஆற்றல் அருள்; அந்த அருளின் தூண்டுதலால்தான் அவன் எத்தொழிலை யும் செய்கிருன். இதையே சக்தி தாளம் கொட்ட இறைவன் ஆடுகிருன் என்று சொன்னர்கள்.*

நவ்வந்துவளுர் பாராட்டும் நடனங்களாகிய கொடு கொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்ற மூன்றிற்கும் உடன் இருந்து தாளம் போடுகிருள் அம்மை. இனி அவர் கூறும் கூத்துக்களை ஒவ்வொன்ரு கப் பார்ப்போம்.

宵 -

'சாந்தோக்கிய உபநிஷத்தில் தேவியார் ஆடலாசிரி பயிைருந்து தாளம் _தட்டப் பரமசிவன் நிருத்தம் செய்தனனென்று கூறியிருத்தல் காண்க. - பரதசேன பதீயம்.

ஓங்கு புகழ் ஈசன் உயர்விதமாய்க் கொண்டாடப்

பாங்கின் இசை நாரதனர் பாடுதலும்-பூங்குழலாள்

பாணி இயற்றினுள் என்ருன் பனிவரையில்

வீணை இயற்றிய வேந்து.-சுத்தானந்தப் பிரகாசம்.