பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பிடியும் களிறும்

சிவபெருமான் ஆடிய கூத்துக்களில் கொடு கொட்டி என்பது ஒன்று. எந்தக் கூத்தும் ஆனந்த மிகுதியால் நிகழ்வது. இறைவனுக்கு இன்பம் துன்பம் என்ற வேறு பாடு இல்லை. ஆயினும் உயிர்க் கூட்டத்திற்கு இன்பம் தரும் செயல் செய்தால் அவனுக்கு இன்பமே யாம். உயிர் கள் தம்முடைய வினைக்கு ஈடாகப் பல பல பிறவிகளைப் பெற்று வாழ்ந்து இறக்கின்றன. மீட்டும் மீட்டும் பிறந் தும் வாழ்ந்தும் மடிந்தும் வினைப்பயனை நுகர்வது உயிர் களின் இடைவிடாத தொழிலாக இருக்கிறது. கடலில் ஒய்வின்றி அலைகள் அடித்துக் கொண்டே இருக்கின்றன; உயிர்கள் பிறவியாகிய கடலில் அகப்பட்டு இன்ப துன்பங் களாகிய அலைகளினூடே உழல்கின்றன. இது ஓயாத உத்தியோகம்; ஒழியாத வேலை.

உயிர்கள் இவ்வாறு அல்லற்பட்டு உழல்வதற்கு அவர் களுக்குச் சிறிதேனும் ஒய்வு வேண்டாமா? ஒவ்வொரு நாளும் நாம் உழைக்கிருேம்; அதனல் இளைப்பு உண்டா கிறது. அந்த இளைப்பைப் போக்கிக் கொள்ள ஒவ்வொரு நாளும் உறங்குகிருேம். ஒரு நாள் உழைப்பினுல் வந்த இளைப்பைப் போக்கிக் கொள்ள அன்றைய இரவிலே ஒய்வு கிடைக்கிறது. அப்படியே ஒரு பிறவியின் இளைப்பை மாற்றிக் கொள்ள அந்தப் பிறவியிலிருந்து விடுதலை மரணம் என்ற உருவத்தில் கிடைக்கிறது.

' உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு '

என்று திருவள்ளுவர் சொல்கிருர்,

இறப்பு என்பது தனித்தனி உயிருக்குத் தனித் தனியே நிகழ்கிறது. ஆனல் உறக்கம் என்பது எல்லோரி டத்தும் ஒன்முக நிகழ்கிறது. இரவு எல்லாருக்கும் பொது வாகத்தானேவருகிறது? அதுபோல எல்லா உயிர்களுக்கும்