பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமான் 21

பொதுவான இறப்பு அல்லது ஒய்வு வேண்டாமா? அப்படி ஓர் ஒய்வு உண்டு; அதற்குப் பிரளயம் என்று பெயர். அந்தப் பிரளயத்தில் சில வகை உண்டு. உலகம் முழுகும் பிரளயம், கடல் அழியும் பிரளயம், காற்று இல்லையாகும் பிரளயம், தீயும் மறையும் பிரளயம், ஆகாசங்கூட இல்லாத பிரளயம் என்று வரவரப் பெரியனவாக அமைந்த பிரளயங்கள் உண்டு. வாரக் கடைசியில் ஒருநாள் ஒய்வு, மாசத்தின் இறுதிவாரத்துக்கு முன் வாரத்தில் இரண்டு நாள் ஒய்வு, வருஷத்தில் ஒரு சமயம் சேர்ந்தாற்போல் ஒரு வாரம் ஒரு மாதம் ஒய்வு என்று மானுக்கருக்கும் பிறருக்கும் ஒய்வு இருப்பதுபோல, இந்தப் பிரளய ஓய்வுகளும் சின்னது பெரியது என்று அடுக்கடுக்காக இருக்கும். அதன் விரிவைப்பற்றி இப்போது அதிகமாகக் கவலைப்பட வேண்டாம்,

எல்லாப் பூதங்களும் உயிர்களும் தேவர்களும் ஒடுங்கி ஒய்வு கொள்ளும் காலத்தை மகாப் பிரளயம் என்று சொல் வார்கள். அந்தக் காலத்தில் இறைவன் ஒருவன்தான் இருப்பான். பகலெல்லாம் தோயின் கடுமை தாங்காமல் வருந்திய குழந்தைகளே வைத்துக் காப்பாற்றிய தாய் இரவில் அவை தூங்கும்பொழுது எவ்வளவு இன்பத்தை அடைகிருள்! பாவம்: பகல் முழுவதும் ஒரு கணமும் அமைதி பெருமல் தவித்தன; இப்போதுதான் தாங்கு கின்றன என்ற ஆறுதலுடன், பின்னும் நன்ருகத் துரங் கட்டும் என்று தாலாட்டுப் பாடுகிருள். இறைவனும் மகாப் பிரளய காலத்தில் உயிர்களையெல்லாம் தன்னி டத்தே அடக்கிக் கொண்டு, அவர்களுக்கு ஒய்வு கிடைத் ததே என்ற ஆனந்தத்தால் கூத்தாடுகிருளும். முன்னலே எல்லா உயிர்களையும் ஒரு முறையாகத் தன்னிடத்தி. விருந்து புறப்பட விட்டான் இறைவன். இப்போது அந்த முறைப்படியே மீட்டும் அடக்கிக் கொண்டான். தேனர், மக்கள், பிற விலங்குகள், பூதம் என்று பல உருவங்களாக ஒடியாடித் தொழில் செய்து திரிந்த உயிர்க் கூட்டங்களைப்