பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பிடியும் களிறும்

பக்கம். புரை-ஒத்த, துசுப்பு-இடை, சீர்-தாளத்தின் இறுதிப் பகுதி.)

கொடுகொட்டி என்ற கூத்தைப் பற்றி வேறு நூல் களும் சொல்கின்றன, இறைவன் முப்புரங்களையும்

எரித்தபொழுது ஆடியது அது என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.*

“ பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்

திரிபுரம் எரியத் தேவர் வேண்ட எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்.

(சிலப்பதிகாரம், 6:39-43)

‘தேவர் புரம் எரிய வேண்டுதலால் வடவை எரியைத் தலையிலேயுடைய பெரிய அம்பு ஏவல் கேட்ட அளவிலே அப்புரத்தில் அவுனர் வெந்து விழுந்த வெண்பவிக் குவை யாகிய பாரதி அரங்கத்திலே உமையவள் ஒரு கூற்றின ளாய் நின்று பாணி துரக்குச் சீரென்னும் தாளங்களைச் செலுத்தத் தேவர் யாவரினும் உயர்ந்த இறைவன் சயா னந்தத்தாற் கைகொட்டி நின்று ஆடிய கொடு கொட்டி யென்னும் ஆடலும்’

என்று அடியார்க்கு நல்லார் இதற்கு உரை எழுது கிரு.ர்.

  • கொட்டி யென்பது அசுரர் நிமித்தமாக இயற்றிய தென்றும், திரிபுர தாண்டவம் என்னும் பெயர் பெறு மென்றும் பரதசேனுபதீயம் என்னும் நூல் கூறும்.

S பாரதி அரங்கம்-கொற்றவையின் அரங்கமாகிய சுடுகாடு.