பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமான் 25

கவித்தொகையின் உரையிலே நச்சிளுர்க்கினியர் கொடுகொட்டியின் இலக்கணத்தைச் சொல்லும் பழைய சூத்திரம் ஒன்றை மேற்கோளாக எடுத்துக் காட்டுகிரு.ர். அது வருமாறு:

' கொட்டி யாடல் தோற்றம் ஒட்டிய உமையவள் ஒருபால் ஆக, ஒருபால் இமையா நாட்டத்து இறைவன் ஆகி, அமையா உட்கும் வியப்பும் விழைவும் பொலிவும் பொருந்த நோக்கித் தொக்க அவுணர் இன்னுயிர் இழப்ப, அக் களம் பொலிய ஆடினன் என்ப; மற்றதன் விருத்தம் காத்தற் பொருளொடு கூடிப் பொருத்த வரூஉம்; பொருந்திய பாடல் திருத்தகு மரபில் தெய்வத் துதிப்பே.

'இறைவனைக் துதிக்கப் பயன்படும் பாடல்களில் இந்தக் கொடு கொட்டி ஆடலைச் சொல்வது மரபு. இது உலகில் உள்ள உயிர்களைக் காத்தற் பொருட்டுச் சிவ பெருமான் நிகழ்த்தியது. உமாதேவியார் ஒரு பால் இருப்ப அசுரர்களை மாய்த்து, அவர்கள் மாய்ந்த போர்க்க ளத் திலே இறைவன் ஆடியது' என்ற செய்திகளை இந்தச் சூத்திரம் புலப்படுத்துகிறது.

தெய்வங்கள் ஆடிய ஆடல் பதினென்று. அவற்றில் சிவபிரான் ஆடிய கூத்துக்கள் இரண்டு. அவற்றில் ஒன்று கொடுகொட் டி.*

இறைவன் ஆடிய கொடுகொட்டி என்னும் கூத்தைக் கூத்துக் கலை வல்லவர்கள் அரசவையில் ஆடி மன்னரை

  • "கொட்டி கொடுவிடையோன் ஆடிற் றதற்குறுப்பு, ஒட்டிய நான்காம் எனல்.’-சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் காட்டிய மேற்கோள்.