பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பிடியும் களிறும்

மகிழ்வுறச் செய்வது பழைய வழக்கம் என்று தெரிகிறது. செங்குட்டுவன் தன் பெருந்தேவியுடன் வீற்றிருந்தபோது பறையூரிலிருந்து வந்த கூத்தச் சாக்கையன் என்பவன் இறைவன் ஆடிய கொடுகொட்டிக் கூத்தை ஆடினன் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.

" திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும் பரிதரு செங்கையிற் படுபறை ஆர்ப்பவும் செங்கண் ஆயிரம் திருக்குறிப்பு அருளவும் செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும், பாடகம் ப ைதயாது சூடகம் துளங்காது மேகலை ஒலியாது மென்முலே அசையாது வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது உமையவள் ஒரு திறன் ஆக, ஒங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தச் சாக்கையன் ஆடலின், மகிழ்ந்து.

(நடுகற் காதை, 67-77)

இறைவன் ஆடும்போது அவனது ஒரு பாகத்தில் அமர்ந்த இறைவி அசையாமல் இருந்தாள் என்ற செய்தி இதனால் தெரியவருகிறது.

אר

ஆடும் பெருமானுடைய கொடு கொட்டியாடலைப் பற்றிப் பாடிய நவ்வந்துவனர் அடுத்த படியாகக் பாண்ட ரங்கம் என்ற கூத்தைப் பற்றிச் சொல்கிருர், இறைவன் திரிபுர தகனம் செய்தபோது, உயிர்க் கூட்டத்துக்கு இன்னல் விளைவித்த புரங்கள் ஒழிந்தன என்ற மகிழ்ச்சி யால் ஆடியது பாண்டரங்கக் கூத்து. அப்பொழுதும் இறைவி உடன் இருந்து தாளம் கொட்டினள்,