பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

எட்டுத் தொகையில் ஒன்ருகிய கலித்தொகை கலிப் பாக்களால் அமைந்தது. ப்ரியன்டல் என்பது பரிபாடல் என்ற பாவால் அம்ைந்தது. மற்ற ஆறு நூல்களும் ஆசிரி யப் பாவால் அமைந்தவை. அகப்பொருளேப்பற்றிச் சொல்வதற்குக் கலிப்பாவும் பரிபாடலும் சிறந்தவை என்று தொல்காப்பியர் சொல்கிரு.ர். இந்த இரண்டு வகைப் பாடல்களிலும் நாடகத்தைப் போல ஒருவர் பேச வும், மற்ருெருவர் அதற்கு விடை சொல்லவுமாகக் கூற்று வகைகளே அமைத்துச் சொல்லலாம். ஒவ்வொருவர் கூற் றும் கணித்தனியே முடிந்து தோன்றும்படி அமைக்கலாம், இப்படி உரையாடலாக வரும் கலிப்பாவை உறழ்கலி என்று சொல்வார்கள்.

அன்றியும் இசையோடு பாடுவதற்கு இந்த இரண்டு வகைப் பாடல்களும் ஏற்புடையவை. இப்பாக்களில் இடையிலே முடுகு வரும்; சில பகுதிகள் இடை மடக்கி வரும்.

நெறியறி செறிகுறி புரிதிரி மறியா

அறிவனே முந்துநீஇத் தகைமிகு தொகைவகை யறியும்

சர்ன்றவர் இனமாக என்பதுபோல வருவன முடுகு, இதற்கு அராகம் என்றும் பெயர் உண்டு: ராகம் என்பதையே அராகம் என்ருர்கள். அப்பெயரே அந்தப் பகுதி இசையோடு பாடுவதற்கு உரியது என்பதைப் புலப்படுத்துகிறது.

புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில் கனவிற் புணர்ச்சி நடக்குமாம் அன்ருே? கனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமாம் அன்ருே?