பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமான் 39

'இறைவன் உயிர்க் கூட்டங்களின் நன்மைக்காகப் பல உருவங்களை எடுத்துப் பல ஆடல் புரிகின் முன்’ என்ற கருத்தை இப் பாடல் வலியுறுத்துகிறது.

கூறப்படாமல் குறிப்புக்கும் அப்பாற்பட்ட சிவ பிரான், அந்தணர்க்கு அருமறை பகர்ந்ததும், கங்கை யைச் சடையில் மறைத்ததும், திரிபுரத்தைச் செற்றதும், பேய்களைப் படையாகக் கொண்டு போர் புரியச் செய் வித்ததும், மணிமிடறும் எட்டுக் கையும் கொண்டிருப்ப தும், அம்மை தாளம் கொட்ட ஆடல் புரிந்ததும், துடிகொட்டியதும், நீறணிந்ததும், புலித்தோல் அணிந்த தும், கொன்றைமாலை புனைந்ததும், தலையோட்டை. ஏந்தியதும் ஆகியவை நம்மிடம் கொண்ட கருணையால் அமைந்தவை என்று நவ்வந்துவஞர் நினைப்பூட்டுகிரு.ர்.

ஆறு அறி. அந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து, தேறுநீர் சடைக்கரந்து, திரிபுரம் தீமடுத்துக் கூருமல் குறித்ததன்மேற் செல்லும்-கடுங்கூளி மாருப்போர் மணிமிடற்று எண்கையாய் கேள்இனி: படுபறை பல இயம்பப் பலஉருவம் பெயர்த்துே கொடுகொட்டி ஆடுங்கால் கோடுயர் அகல் அல்குற் கொடிபுரை நுசுப்பிளுள் கொண்டசீர் தருவாளோ! மண்டமர் பலகடந்து மதுகையால் நீறுஅணிந்து பண்டரங்கம் ஆடுங்கால் பனேனழில் அணைமென்ருேள் வண்டரற்றும் கூந்தலாள் வளர்துக்குத் தருவாளோ! கொலைஉழுவைத் தோல் அசைஇக் கொன்றைத்தார்

சுவற்புரளத் தலஅங்கை கொண்டு காபாலம் ஆடுங்கால் முலேஅணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ? என ஆங்குப் பாணியும் தூக்கும் சீரும் என்றிவை மாணிழை அரிவை காப்ப ஆணமில் பொருள்எமக்கு அமர்ந்தனை ஆடி.