பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பிடியும் களிறும்

என-என்று சொல்ல. ஆங்கு -அக்காலத்து; அசை நிலையுமாம். பாணி தூக்கு சீர்-தாளத்தின் முற்காலம் இடைக் காலம் முடிவு காலம் என்னும் முக்காலப் பகுதி. "என்ற இவை' என்பது விகாரப்பட்டு என்றிவை என்று ஆயிற்று.

மாண் இழை - மாட்சிமையுடைய அணி; பிறரால் செய்யாமல் இயற்கையாக அமைந்தமையால் மாண் இழை ஆயின; எக்காலத்தும் கழற்றவேண்டிய அவசியம் இல்லாத மாட்சியை உடையவை என்றும் சொல்லலாம். அரிவை: இங்கே பருவத்தைக் குறிக்காமல் பொதுவாகப் பெண் என்ற பொருளில் வந்தது. காப்ப - காலத்தை வரையறுத்துப் பாதுகாக்க. ஆனம்-அன்பு அமர்ந்தனைபொருந்தினே. ஆடி அமர்ந்தனை.)

"நாங்கள் உன்னை அடைவதற்கு ஏற்ற வகையில் உயர்ச்சி பெறவில்லை; அன்பு செய்யவில்லை. ஆனாலும் நீ எங்களுக்கு ஏற்ற வகையில் உருவம் முதலியன பெற்று இறங்கி வந்து அருள் செய்கிருய்' என்று இறைவன் கருணையைப் பாராட் டி. வியக்கிருர் புலவர்.

தாளத்தை மூன்று கூருகப் பிரிப்பதுண்டு. எடுத்தல், விடுத்தல், தொடுத்தல் என்ற மூன்று காலப் பிரிவு அவை. தாளத்தை முதலில் கொட்டுதலும், பிறகு இடையே கையை விடுத்தலும், மீட்டும் தொடுத்துக் கொட்டுதலு மாகிய அந்த மூன்றையும் முறையே பாணி, தூக்கு, சீர் என்பார்கள். இங்கே அம்பிகை தாளம் கொட்டினுள் என்பதையே தாளத்தின் கூறுபாட்டை நிகழ்த்தியதாகக் கூறினர். "ஒரு தாளத்திற்குப் பாணி தூக்குச் சீரென்னும் மூன்றும் உளவேனும், ஒவ்வொன்று ஒவ்வோராடற்கு மிகுதி வகையாற் சிறந்தமை பற்றி ஒரோ வொன்றையே கூறிஞர்' என்று நச்சிர்ைக்கினியர் காரணம் கூறுகிருர்,