பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமான் 37

அவனை அறியாமலே இருக்கின்றன. ஆளுல் அவன் அவற்றை மறப்பதில்லை. அவற்றிற்கு அவன் பால் அன்பு இல்லை; ஆனல் அவனுக்கு அவற்றின் பால் அருள் இருக் கிறது; எப்படியாவது தன்னை அறிந்து தன்னிடம் வந்து இன்புறவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது.

இத்தகைய கூத்துக்களே ஆடிய பெருமையை எடுத்து யாரும் சொல்லும்படியாக அவன் ஆடுகிருன், இந்த ஆட் டம் நமக்காக, அன்பு சிறிதும் இல்லா நமக்காக, அருள் பெரிதும் உடைய இறைவன் விரும்பி, வாக்குக்கும் மனத் துக்கும் எட்டாத தன் நிலையினின்றும் இறங்கி வந்து, நமக்குப் பொருந்தும் உருவம் உடையவளுகிச் செயல் உடையவனகி நின்று, தன் அருளே தேவியுருவத்தில் நின்று தாளம் போட, ஆடல்களே ஆடினன். அவனுடைய கருணையை என்னவென்று சொல்வது!

நவ்வந்துவளுர் இவற்றை நினைந்து பாராட்டுகிருர்; "இறைவா, இப்படியெல்லாம் நாங்கள் பாராட்டும்படி அவ்வக்காலத்தில் உமாதேவி தாளம் கொட்ட, அன்பில் லாத எங்களுக்கு ஏற்ப உருவெடுத்து வந்து ஆடிய்ை நீ. உன் அருள்தான் என்னே!’ என்று பாடுகிரு.ர்.

என ஆங்குப் பாணியும் துக்கும் சீரும் என்றிவை மாண் இழை அரிவை காப்ப ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.

! என்று நாங்களும் பிறரும் சொல்ல, அவ்வக்காலத் தில் பாணி, தூக்கு, சீர் என்ற இந்தத் தாளக்கூறுபாடுகளை" மாட்சிமையையுடைய ஆபரணங்களே அணிந்த உமா தேவி கொட்டிப் பாதுகாக்க, சிறிதும் அன்பில்லாத பொருள்களாகிய ஏழையேங்களுக்காக ஆடல் புரிந்து பொருந்திய்ை :