பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடியும் களிறும் 43

ஒரு நாள் அவர்கள் வீட்டுக்குத் துறவிகள் சிலர் வந்திருந்தார்கள். அவர்களே எந்த முறைப்படி வரவேற்க வேண்டுமோ, அப்படி வரவேற்று உபசாரம் செய்து உண் பித்தார்கள். தவம் நிரம்பிய அப் பெரியோர்கள் தலை வன யும் தலைவியையும் கண்டு அருள் மிகுந்து ஆசி கூறி ஞர்கள். உள்ளத்திலிருந்து வந்த அந்த ஆசி மொழிகள் அவ்விருவருடைய செவிகளிலும் தண்மையாக விழுந்தன. உள்ளத்தைத் தொட்டு அங்கும் குளிர்ச்சியை உண்டாக் கின, இறைவனே அந்தத் தவ முனிவர் கோலத்தில் எழுந் தருளிேைன என்று கூடத் தோற்றியது. இல் வாழ்க் கையைத் தாம் மேற்கொண்டதற்கு உரிய பயன் முழுவ தும் அன்று கிடைத்தது போல இருந்தது.

தவ முனிவர்கள் விடைபெற்றுச் சென்றனர். நல்லது செய்தோம் என்ற நினைவோடு கணவனும் மனைவியும் பெருமிதம் கொண்டு வீற்றிருந்தனர்.

தலவி: அந்த முனிவர்களுடைய திருமுகத்தில் என்ன ஒளிவீசியது அவர்களுடைய வார்த்தைகள் அன்பிலே தோய்ந்தல்லவா எழுந்தன?

தலைவன்; நூறு இல்லறத்தாரைப் பேணி உபசரிப்பதைக் காட்டிலும் ஒரு தவ முனிவரை உபசரிப்பது உயர்ந் தது. இல்வாழ்வோர் நம்மிடம் அன்புடையவர்களாக இருப்பார்கள்.தவமுனிவர்களோ நமக்கு அருள்பாலிப் பார்கள். தவம் செய்பவர்களை வழிபடுவதனுல் நாம் உள்ளத்தால் உயர்வோம். அவர்களுடைய ஆசி மொழிகள் நம் வருங்காலத்துக்குத் துணையாகநிற்கும். நமக்கு அருள் செய்வோராகிய அவர்கள் திறத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் பன்மடங்கு பயனேத் தரும்,