பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பிடியும் களிறும்

போட்டது. அவள், போகக்கூடாதென்று சொல்வாளே என்ற நினைவு அன்று; தன்னுடைய பிரிவுக்கு அவள் உடம் பட்டாலும், தான் பிரிந்திருக்கும் காலத்தில் அவள் மிகவும் மனம் தளர்ந்து விடுவாளே என்ற எண்ணந்தான் அவனுக்குக் கவலையை உண்டாக்கிற்று .

இல் வாழ்க்கை நடத்துபவர்களின் கடமையை நன்கு உணர்ந்தவள் அவள். அவள் அறிவிற் சிறந்தவள்; அறத்திற் சிறந்தவள்; ஆடவர் கடமையையும் பெண்டிர் கடமையையும் உணர்ந்தவள்; அறம் செய்வதில் தளராத ஊக்கம் உடையவள். அவளுடைய துணை இல்லை யேல் தலைவனுடைய அறச் செயல்கள் நன்கு நடைபெரு. அவளுடைய உயர்ந்த பண்பினல் தான் அவன் முட்டிறின் அறங்களை முடித்துப் புகழ் பெற்ருன் அவளுடைய அறிவையும் அற நினைவையும் அழுத்திவிட்டு மேலோங்கி நிற்பது, அவனிடம் அவளுக்கு உள்ள அன்பு. அவள் அறிவு எத்தனை சமாதானம் சொன்னலும் அந்த அன்பு மீதுார்ந்து அவளுக்கு ஏசறவை உண்டாக்கும். அவனைப் பிரிந்து வாழ்வதற்கு அவள் அறிவும் அற நினைவும் உடம் பட்டு உறுதி கூறினலும், அவள் அன்பு பிரிவைத் தாங் காமல் நைந்து வாடச் செய்யும், அத்தனை முறுகிய அன்புடையவள் அவள்.

இவற்றையெல்லாம் அவன் நினைந்து பார்த் தான். பொருள் இல்லாவிட்டால் வாழ்க்கையே சுவையற்றுப் போகும் என்பதை உணர்ந்தவனதலால், எவ்வாறேனும் அவளுக்கு ஆறுதல் கூறிப் புறப்பட்டுவிட வேண்டும் என்று உறுதி பூண்டான். ஒரு நாளிற் பல சொல்லி அவளைத் தேற்றுவதைக் காட்டிலும், சிறிது சிறிதாகப் பல செய்திகளைச் சொல்லி, மெல்ல மெல்ல அவளுடைய நெஞ்சில் ஆறுதலை உண்டாக்குவதுதான் நல்லதென்று முடிவு செய்தான்.