பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடியும் களிறும் 47

வளரும். புரிவு அமர்ந்த (விருப்பம் அமைந்த) காத லால் இன்பப் புணர்ச்சி விளைகிறது என்பது உண்மை. ஆனல் உடம்போடு வாழும் நமக்கு அந்த உடம்பர் நன்முக இருந்தால் தான் இன்பம் பெருகும். உள்ளத் திலே அமைந்த காதல், அளவளாவிக் கலக்கும் இன்பத்தை உண்டாக்குகிறது. அதற்கு ஏற்ற வசதி கள் வேண்டும். அவை பொருளினுல்தான் அமையும். ஆதலால் பொருளானது அறத்தையும், பகையை வெல்லும் திறத்தையும் தருவதோடு, புரிவு அமர் காதலினல் புணரும் புணர்ச்சியையும் தரும் என்ப தையும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அன்று பொருளால் வரும் நன்மையைத் தலைவன் தன் தலைவிக்குத் தெளிவாக உணர்த்தினுன், தான் பொருளுக்காகப் பிரியவேண்டியிருக்கும் என்று அப்போது சொல்லவில்லே. பின்னலே பிரியும்போது இந்த வார்த்தைகள் பயன்படும் என்று அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத் தான்.

அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும் பெரிதாய பகை வென்று பேணுரைத் தெறுதலும் புரிவு அமல் காதலிற் புணர்ச்சியும் தரும்

என்று பொருளின் சிறப்பை ஒருவாலு அன்று அறி வுறுத்தினன்.

மற்ருெரு நாள் தலைவனும் தலைவியும் பேசிக்கொண் டிருந்தார்கள். பொருள் தேடச் செல்பவர்கள் ஊர் கடந்து நாடு கடந்து மலே கடந்து செல்லவேண்டியிருக் கும் என்று தலைவன் சொன்னன். 'பாலை நிலத்தின் வழியேகூடப் போக நேரிடும். பாலே நிலம் மிகவும்