பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பிடியும் களிறும்

கொடிய காட்சிகளே உடையது. அந்தக் கொடுமையை எண்ணித் தங்கிவிட்டால் பொருள் கிடைக்குமா?* என்ருன். -

அப்படி என்ன கொடுமை அங்கே இருக்கப் போகிறது?’ என்று கேட்டாள் தலைவி. அப்படிக் கேட்கும் போது அவள்முகத்தைச் சிறிதே அசைத்தாள், அப்போது அவள் காதிலே அணிந்திருந்த கனமான குழை ஊசலாடு வதுபோல அசைந்தது. தலைவன் அதைக் கண்டு புன்னகை பூத்தான். -

தலைவன் : கனமான குழையை உடைய பெண்ணே, பாலை நிலத்தில் என்ன_கொடுமை இருக்கிறதென்மு கேட்கிருய் அதை நினைத்தாலும் நெஞ்சு வெந்து போகும். அது சுடுகாடு போல இருக்கும். எங்கும் ஒரே வெப்பம்; நெருப்பைப் பரப்பினுற் போன்ற வெப்பம். அங்கே மனிதன் நடக்க முடியுமா? அடி தாங்குமா? அடி தாங்கும் அளவின்றி, அழல் போன்ற வெம்மையை உடையது பாலை நிலமாகிய காடு; அதைப் போன்ற கடுமை வேறு எங்கும் இல்லை.

தலைவி : அந்தக் கடுமையான பாலை நிலத்தில் எந்த

உயிரும் இருக்க இயலாதே!

தலைவன்: அதுதான் ஆச்சரியம் ஈரமின்றி, நிற்க நிழ லின்றி, நெருப்பாகக் கொதிக்கும் அந்தப் பாலைவனத் திலும் கண் குளிரக் காணும் காட்சி ஒன்று உண்டு.

தலைவி : நெருப்பு எரிவது அழகாக உள்ளது என்று சொல்வதுபோல இருக்கிறது, நீங்கள் சொல்வது. நெருப்புக்குப் புறம்பாக நிற்பவனுக்கு அது அழ காகத் தோற்றலாம். நெருப்பிலே வீழ்ந்து எரிகிற வனுக்கு அது அழகாக இருக்குமா?