பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடியும் களிறும் 49

தலைவன் : அந்த அதிசயத்தைத் தான் சொல்ல வரு கிறேன், கேள். பாலை நில மென்ருல், படைப்புக் காலந்தொட்டு நீரும் நிழலு மற்ற பாலைவனமாக இருப்பது அன்று. இந்த நாட்டிலே இயற்கை யான பாலை நிலம் இல்லை. மழை பொழியாமல் வறண்டுபோன சில பகுதிகள் பாயைாக மாறிவிடும். மலையைச் சார்ந்த குறிஞ்சி நிலப் பகுதிகளும், முல்லை யாகிய காட்டு நிலத்தின் சில பகுதிகளும் கடுமை யான கோடையில் சில சமயங்களில் பாலையாகி விடும். அவ்விடத்தில் முன்பு நீர் தேங்கியிருந்த இடங்களில் நீரெல்லாம் வற்றிவிடும். மிகவும் ஆழமான நீர் இருந்த இடத்தில் நீர் வற்றிப் பேருக்குச் சிறிதளவு நீர் இருக்கும்.

தலைவி : பாலையில் நீர்கூட இருக்குமா?

தலைவன் : பனையளவு ஆழம் இருந்த இடத்தில் கால் கழுவக்கூடப் போதாத அளவுக்கு நீர் வற்றிவிடும் என்ருல் அது ஒரு நீரா? ஆனால் அதற்குக்கூட ஏங்கிப் போய்ச் சில யானைகளும் மான்களும் அந்தப் பர்ல்ே நிலத்தில் திரியும், -

தலைவி. என்ன! யானைகளா? அவை அங்கே எப்படி

வந்தன?

தலைவன் : முன்பு குறிஞ்சியாக இருந்தபோது அங்கே வாழ்ந்தவை. இப்போது மழை மறந்து பாலையாக மாறிவிடவே, போக்கிடம் காணுமல் யானைகள் தளர்ந்து வாடி அங்கும் இங்கும் நீர் தேடித் திரியும்.

தலைவி : அவற்றைப் பாலை நிலத்திற் செல்பவர்கள்

பார்த்து இரக்கப்படுவார்கள். அதைப் பார்த்து . எப்படிக் கண் குளிர முடியும்?

பி.டி.-4