பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடியும் களிறும் 5i

தலைப்படும். இது கலங்கிய நீராயிற்றே என்று எண் ணுமா? தம் கன்றுகள் காலால் அளேந்ததனால் அந்த நீருக்குப் பின்னும் பெருமை அதிகமாகும். ஏழை குடிப்பது கூழாக இருந்தாலும், தன்னுடைய குழந்தை கைளால் அளேந்து அதை உண்ண, எஞ்சி யதை எத்தனை மகிழ்ச்சியோடு அவன் குடிப்பான்!

" அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ். ’

ஆகவே கயந் தலையையுடைய கன்றுகள் துடியடியால் கலக்கிய சின்னிரைப் பிடியும் களிறும் அளவற்ற உவகை யோடும் ஆறுதலோடும் உண்ணத் தலைப்படும். எது முன்னலே உண்ணும், தெரியுமா? சொல் பார்க்கலாம்.

தலைவி : களிறுதான். அதுதானே முறைமை? பிடி தன் கணவன் நீரை உண்பதைக் கண்டு களித்துப் பின் தான் உண்ணும் என்று நினைக்கிறேன்.

தலைவன் : உன் இயல்புக்கு ஏற்றபடியே எண்ணிச் சொன் ய்ை. ஆனல் அந்த முறை நல்ல காலத்துக்கு உகந்தது. பிடி அப்படித்தான் எண்ணும்; களிறு உண்ட பிறகு தான் உண்ணலாம் என்றே நினைக்கும். அதன் அன்பு நிலை அத்தகையது. ஆளுல் களிறு தன் ஆண்மை யாலே துன்பத்தைச் சகித்துக் கொண்டு, மெல்லிய லாகிய பிடியை முன்னே உண்ணச் செய்யும். நீர் எல் லோருக்கும் போதுமா, போதாதா என்ற ஐயம் உண் டாகும்போது, தனக்குக் குறைவாக இருந்தாலும் குற்றமில்லை, தன் காதற் பிடிக்குப் போதியதை அளிக்கவேண்டும் என்ற உண்மையன்பே அவ்வாறு செய்வதற்குக் காரணம். தம் கன்றுகள் முன்னே நீர் உண்ண, அதைக் கண்டு உவந்தது ஒருவகை அன்பு. அது தாய்மையன்பு. காதற் பிடியோ தன் காதற்