பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பிடியும் களிறும்

களிறு முன் உண்ணவேண்டும் என்று நினைந்து, உண் ளுமல் நிற்கும். பிடிதான் முன்னே உண்ணவேண்டும் என்று களிறு நினைக்கும். இரண்டும் உண்ணுமல் வறிதே நிற்கையில் களிறு பிடியை வற்புறுத்தி நீரை உண்ணச் செய்யும். அது உண்ட பிறகே தான் உண்ணும்.

துடிஅடிக் கயங்தலே கலக்கிய சின்னிரைப் பிடிஊட்டிப் பின்உண்ணும் களிறு,

தலைவி : அந்த வெம்மையினிடையே காதலின் தண்மை

உச்ச நிலையில் இருக்கும் போலும்!

தலைவன் ; தன் நலத்தை அறவே மறந்து நிற்றல்தானே

அன்பிற்கு அடையாளம்?

மற்ருெரு நாள்: அன்றும் பாலை நிலத்தைப்பற்றிய பேச்சே அவர்களிடையே நிகழ்ந்தது.

தலைவி : அன்று பாலைநிலத்தைப்பற்றிச்சொ ன் னிர்களே! யானைகள் திரியும் காடென்றீர்கள்; அவை நீர் உண்ணும் காட்சியை உணர்த்தினர்கள். அவற்றிற்கு உணவு ஒன்றும் அங்கே கிடைக்காதா? எங்கேனும் மரங்கள் இருந்தால் அவற்றின் தழையை உணவாகக் கொள்ளலாமே. -

தலைவன் : மரங்கள் இருக்கும். ஆனல் எல்லாம் இல தீந்து விறகாகப் பயன்படும்படி நிற்கும். மழை பெய் யாமல் வறண்டுபோன அந்த நிலத்தில் இலைகளெல் லாம் உதிர்ந்து பட்டுப்போன மரங்களைத்தான் காண முடியும். அந்த மரங்களைப் பார்த்தால் நமக்கு