பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடியும் களிறும் 53

உண்மை தெரியவரும், ஒரு காலத்தில் அவை அந்த அளவுக்கு வளரும் படியாக அந்த நிலம் இருந்திருக்கத் தானே வேண்டும்? மரமாக வளரும்போது அங்கே மழை பெய்தது; நீர் இருந்தது; பசுமை இருந்தது; இலை தழைத்தது. இன்பம் இருந்தது. மழையின்றிப் பாலை நிலமாகிவிட்ட பிறகு இலைகள் வாடிச் சருகா யின; கொம்புகள் தீந்தன; மரம் பட்டுப்போயிற்று. இருந்த இன்பம் ஒடிப்போயிற்று. பிறகு அங்கே என்ன இருக்கும்? துன்பம் வந்து குடி புகும். இன்பத் தினின்றும் நீங்கி, இலைகளெல்லாம் தீய்ந்துபோன உயர்ந்த மரங்கள் நிரம்பியது காடு; அங்கே துன்பந் தான் நிரம்பியிருக்கும்; துன்புறும் தகையவே காடு.

இன்பத்தின் இகந்துஒரீஇ இலைதீந்த உலவையால் துன்புறுஉம் தகையவே காடு.

தலைவி நினைத்தாலே உடம்பு நடுங்குகிறது. நீரற்ற

அந்தப் பாலையிலும் காதலினல் அமையும் தியாக உணர்ச்சி ஊற்றெடுத்துப் பெருகுகிறதே! அதுதான் ஆச்சரியம். அன்று சொன்னிர்களே, பிடியூட்டிப் பின் உண்ணும் களிற்றைப்பற்றி, அதை நினைக்க நினைக்க என் உள்ளத்தில் வியப்புப் பொங்குகிறது.

தலைவன் : அதுபோன்ற வேறு காட்சிகளும் உண்டு.

தலைவி காதலின் சிறப்பைப் புலப்படுத்தும் காட்சியா?

தலைவன்: ஆம்,

தலைவி மக்களிடையே அமையும் காதலுக்கும் அங்கே

இடம் உண்டா?

தலைவன்: இல்லை. இறைவன் படைப்பிலே காதல் எந்தப்

பிராணியினிடம் இருந்தால் என்ன? காதல் காதல்