பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பிடியும் களிறும்

தான். அது எவ்விடத்திலும் எக்காலத்திலும் சிறந்த உணர்வாகவே நிற்கும், -

தலைவி. பிடியும் களிறும் காதலால் பிணைப்புண்டதைச் சொன்னீர்கள். இப்போது சொல்ல வந்தது எவ் வகைக் காதல்?

தலைவன்: இது பறவையின் காதல். பாலைநிலத்தில் புருக் கள் வாழும், இலை தீந்துபோன மரங்களின் கொம்பு களிலே அவை தங்கும். வெப்பம் தாங்காமல் தன் மென்மையான பெடை வருந்துவதை ஆண் புருப் பார்த்து மனம் புண்படும். புறத்தே உள்ள வெம்மை யைவிடத் தன் காதற் பெடை படும் துயரம் கண்டு அதன் அகத்தே எழும் வெம்மை மிகுதியாக இருக் கும். அன்பு கொண்ட இளைய அந்தப் பெடை தளர்ச்சி அடைவதைப் பார்த்து, அதை எவ்வாறு நீக்கலாம் என்று ஆண் புருவானது சிந்திக்கும். அதற் கும் ஆண்டவன் அறிவைப் படைத்திருக்கிருன். அதற்கு ஒரு தந்திரம் தோன்றும், உடனே தன் சிறகை விரித்துத் தன் பெடைக்கு நிழலை உண்டாக்கும்; மெத்தென்ற அச் சிறகாலே விசிறி வெப்பத்தை ஆற்றும். அன்பினால் செய்யும் இந்தச் செயல்கள் பெண் புருவுக்கு அளவற்ற ஆறுதலை உண்டாக்கும். நிழல் செய்து காற்று வீசும் அந்தச் சிறகு மென்மை யானது; ஆனல் அப்படிச் செய்யும் அன்பு எவ்வளவு வன்மையானது எவ்வளவு உரம் வாய்ந்தது!

அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை மென்சிறக ரால் ஆற்றும் புறவு.

தலைவி அந்தப் புருக்களைக் கற்பனைக் கண்ணினலே கண்டு வியந்தாள். - . .