பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடியும் களிறும் 55

பின்னும் ஒருநாள் காதலர் இருவரும் பாலை நிலத் தைப் பற்றிய பேச் சிலே ஈடுபட்டார்கள். பிடியூட்டிப் பின் உண்ணும் களிற்றையும், மடப்பெடையின் வருத்தத்தை மென்சிறகால் ஆற்றும் ஆண் புருவையும் நினைத்து நினைத்து வியந்தாள் காதலி. இன்று மறுபடியும் பாலே நிலத்தைப் பற்றிய செய்திகளைக் கேட்கலாளுள் அவள்.

தலைவி: குறிஞ்சி நிலம் மாறிப் பாலையாகும் என்று சொன் tைர்களே; மலையின் பகுதிகள் மழையின்றி மாறினல் அவற்றில் சில மரங்களாவது இருப்பதில்லையா?

தலைவன்: மரங்கள் இருந்தால் அது பாலையாகுமா? குறிஞ் சியில் சில இடங்களில் வளம் கூடியிருக்கலாம்; சில இடங்களில் குறைந்திருக்கலாம். அவை யாவும் குறிஞ்சியே. அங்கே மக்கள் வாழலாம். பாலையில் மனிதர்கள் வாழவே முடியாத.

தலைவி. மலைப் பகுதிகளில் மழை பெய்யாமல் போளுல்

என்னகும்? -

தலைவன்: அடர்ந்த மலைப்பகுதிகள் எந்தக் காலத்தும் வளம் குன்ருமல் இருக்கும். மற்ற இடங்கள் வறண்டு போனலும் தன் வளப்பத்துக்குக் கேடுவராமல் விளங் குவது மலை. ஆனல் சில சிறு குன்றுகள் உள்ள இடங் கள் மழையில்லாவிட்டால் பாலையாகிவிடும். அங்கே உள்ள மரங்கள் எல்லாமே வாடிப் போகும். மற்ற மரங்களைவிட வெப்பத்தை அதிகமாகத் தாங்குவது மூங்கில். அது கூட வாடிப் போய்விடும். உக்கிர மாகப் பாலையில் கதிரவன் தன் கதிர்களை வீசுவான், அந்த மிகுதியான கதிர்கள் கல்மிசை வளர்ந்த வேய் கள் வாடும்படியாகச் சுட்டுப் பொசுக்கும். அங்கே மனிதர்கள் தலைகாட்ட முடியாது. துன்னுவதற்கு அரிய தகைமையை உடையவை அந்தக் காடுகள்.