பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பிடியும் களிறும்

கல்மிசை வேய்வாடக் கனகதிர் தெறுதலால் துன்னருஉம் தகையவே காடு.

தலைவி: துன்னருந் தகையவாகிய அந்தக் காட்டிலும்

காதல் துன்னுவது உண்டோ?

தலைவன் பிடியும் களிறும், பெடையும் காட்டிய உன்னதமான காதல் திறத்தை இந்த வேய் வாடும் பாலையிலும் காணலாம்.

தலைவி. வலிய வேய் வாடும் கொடிய காடு ஆயிற்றே!

அங்கேயுமா அத்தகைய காட்சி உண்டு?

தலைவன்: அந்தக் கொடிய காட்டிலேதான் மென்மை யான மான்களின் காதல் திறத்தைப் புலப்படுத்தும் காட்சியைக் காணலாம்.

தலைவி. வன்மையான வேயும் வாடும் காட்டில் மென்மை

யான மான்கள் இருப்பதா!

தலைவன்: முன் குறிஞ்சியாக இருந்த இடமல்லவா? நிழல் செறிந்த காட்டினுாடே ஒடித் திரிந்த அவை இப் போது நிற்க நிழலின்றித் தவிக்கும். மூங்கிலில் இலை கள் இருந்தாலும் ஏதோ கொஞ்சம் நிழல் இருக்கும். அதுதான் வாடி வற்றலாகிவிட்டதே; அங்கே ஏது நிழல்?

தலைவி: இங்கும் ஆண்மான் பெண்மான் இரண்டும்

உண்டோ? -

தலைவன்: ஆம்; அப்போதுதானே காதலின் உயர்வு

புலப்படும்?

தலைவி. எப்படிப் புலப்படும்?