பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii

குறிஞ்சிக் கலியில் அமைந்த 29 பாடல்களைப் பாடி யவர் கபிலர். அவர் குறிஞ்சித் திணையைப் பாடுவதில் திறமை பெற்றவர். மருத்த் கலியை 35 செய்யுட்கள் அமையப் பாடியவர் மதுரை மருதன் இளநாகனர். 17 செய்யுட்களையுடைய முல்லைக் கலியை இயற்றினவர் சோழன் நல்லுருத்திரளுர், நெய்தற் கலியாக அமைந்த 33 பாடல்களின் ஆசிரியர் நல்வந்துவளுர்,

கலித்தொகைச் செய்யுட்கள் விரிவான பொருள் அமைதியை உடையவை; பாட்டு அந்த அமைப்புக்கு இடம் கொடுக்கிறது. ஆகவே, அழகான சித்திரம் ஒன்றை பலவகை நிலைக் களங்களும் அமைய நுணுக்கமான பகுதிகள் அழகு செய்ய விரிவான கிழியில் அமைத்தாற் போலக் கவிஞர்கள் கவிப்பாக்களை இயற்றியிருக்கிரு.ர்கள். அவற்றைப் படிக்கையில் ஒசை இனிமையும் கவிப்பண்பும் பொருட்சிறப்பும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன.

கற்றறிந்தார் ஏத்தும் கலி

என்றும்,

திருத்தக்க மாமுனிசிக் தாமணி கம்பன் விருத்தக் கவிவளமும் வேண்டேம்-திருக்குறளோ கொங்குவேள் மாக்கதையோ கொள்ளேம்; கனி ஆர்வேம் பொங்குகலி இன்பப் பொருள்

என்றும் பாராட்டும்படி அமைந்த பாடல்களேக் கலித் தொகையில் காணலாம் ,

இந்த அரிய நூலுக்கு நச்சிளுர்க்கினியர் அழகிய உரை ஒன்றை எழுதியிருக்கிருர்; எட்டுத் தொகை நூல்களில் குறுந்தொகைக்கும் அவர் உரை எழுதினரென்று தெரி கிறது. அது இப்போது கிடைக்கவில்லை. கலித் தொகைக்கு அவர் எழுதிய உரையேனும் கிடைத்தது தமிழர்களின் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.

இதை முதல் முதலாக உரையுடன் அச்சியற்றிவெளிப் படுத்தியவர் யாழ்ப்பாணத்துப் பேரறிஞராகிய திரு. சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள். அதன்பின் மகாம்கோ பாத்தியாய டாக்டர் ஐயரவர்களுடன் இருந்து பழகித்