பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 பிடியும் களிறும்

தோழி : அவர் வருவார் என்பதற்கும் அவர் சொன்ன

தற்கும் என்ன தொடர்பு?

தலைவி : சொல்கிறேன். பின்னும் அவர் சொன்னதைக் கேள். இன்பமெல்லாம் போய் நீங்க, இலைகள் தீந்து போன பட்ட மரங்கள் இருத்தலால் துன்பத்தைத் தரும் தன்மையை உடையன பாலைப் பகுதிகள் என்று அவர் சொன்னர். ஆளுல் அந்தத் துன்புறும் தகையவாகிய காட்டில் அன்பு கொண்ட மடப் பெடை தளர்ச்சியுற்ற வருத்தத்தைக் கண்டு ஆண் புருவானது தன்னுடைய மெல்லிய சிறகினல் ஆற்று விக்கும் என்றும் சொன்னர்.

இன்பத்தின் இகந்துஒரீஇ

இலைதீந்த உலவையால் துன்புறுஉம் தகையவே

காடுஎன்ருர், அக்காட்டுள் அன்புகொள் மடப்பெடை

அசைஇய வருத்தத்தை மென்சிறக ரால் ஆற்றும்

புறவுஎனவும் உரைத்தனரே!

(இன் பத்தினின்றும் விட்டு நீங்கி இலைகள் கரிந்து போன பட்ட மரங்களில்ை, தம்பால் அடைந்தார்க்குத் துன்பத்தை உண்டாக்கும் தன்மையுடையன பாலைவனப் பகுதிகள் என்று சொன்னர். அந்தக் காட்டில், அன்பு கொண்ட இளைய பெண் புருவானது வெப்பத்தால் தளர்ந்து பெற்ற வருத்தத்தை ஆண் புருவானது தன் மெல்லிய சிறகுகளால் ஆற்றும் என்றும் சொன்னர் தலைவர்.

இகந்து ஒரீஇ-விட்டு நீங்கி. தீந்த-கருகிய. உலவைபட்ட மரம்; உலர்ந்த கொம்புமாம். தகைய-தன்மையை