பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பிடியும் களிறும்

உடையன, மடப்பெடை-இளமையையுடைய பெண்புரு. அசை இய-தளர்ச்சியுற்ற. சிறகர்-சிறகு; சிறகு சிறக ரென்று வருவது போலி; வண்டு, வண்டர் என்று வருவது போல்வது.) -

தோழி : இன்னும் என்ன சொன்னர்?

தலைவி : குன்றின் மேலே முளைத்த மூங்கில்கள் வாடும் படி மிக்க கதிர்களைக் கதிரவன் வீசுவாம்ை. அப்படிச் சுடுவதாலே பாலைநிலம் அணுகுவதற்கு அரியதாம். ஆனாலும் அங்கே காதலால் விலங்குகளும் தியாக உணர்ச்சியுடையனவாக இருத்தலேக் காணலாமாம். அந்தக் காட்டிலே நிற்பதற்கு நிழல் இல்லை. அதனுல் வருந்திய பெண் மானுக்கு அருகில் தானே நின்று ஆண் மான் தன் நிழலை அளித்துப் பாதுகாக்கு மாம்.

கல்மிசை வேய்வாடக்

கனகதிர் தெறுதலால் துன்னரூஉம் தகையவே

காடுஎன்ருர்; அக்காட்டுள் இன்னிழல் இன்மையான்

வருந்திய மடப்பிணைக்குத் தன்கிழலைக் கொடுத்து அளிக்கும்

கலையெனவும் உரைத்தனரே.

(குன்றின்மேல் வளர்ந்திருந்த மூங்கிலும் வாடும்படி யாக மிகுதியான கிரணங்கள் சுடுவதால் பாலைநிலப் பகுதிகள் யாரும் சேர்வதற்கரிய தன்மையை உடையவை என்று தலைவர் சொன்னர் அந்தக் காட்டில் இனிய நிழல் இல்லாமையால் வருந்திய இளமையையுடைய பெண் மானுக்குக் கலை மான் தன் நிழலைக் கொடுத்து அதன் உயிர்போகாமல் பாதுகாக்கும் என்றும் அவர் சொன்னர்.