பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 பிடியும் களிறும்

கல்-குன்று. வேய்-மூங்கில். கனை-மிகுதி. தெறுதல்சுடுதல். துன்னுதல்-சேர்தல்; துன்னரூஉம்-சேர்தற்கு அரிய. பிணை-பெண் மான். அளிக்கும்-பாதுகாக்கும். கலே-ஆண் மான். தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் என்பதற்கு, 'தான் நின்று தன் நிழலைக் கொடுத்து உயிரை அளியா நிற்கும் என்று நச்சிர்ைக்கினியர் பொருள் எழுதுவர்.1

தோழி : இவற்றிற்கும் அவர் வருவதற்கும் என்ன

தொடர்பு என்றல்லவா கேட்கிறேன்?

தலைவி : விலங்கினங்கள் தம்முடைய காதலிமாரைக் காப்பாற்றுவதைக் கண்டவர், தாம் தம் காதலியை யும் வாடாமல் காப்பாற்ற வேண்டும் என்று கருத மாட்டாரா? ஆதலால் இவற்றைக் காணுந்தோறும் அவருக்கு என்னிடம் இரக்கம் உண்டாகும். அது உள்ளத்திலே இடங்கொள்ளும். பொருள் சட்டப் போன இடத்தில் அந்த இரக்கம், விரைவிலே பொருளை ஈட்டிக் கொண்டு திரும்பவேண்டும் என்ற நினைவை உண்டாக்கும். ஆகவே உரிய காலத்தில் அவர் திரும்பி வருவார் என்று துணிந்தேன். இப்படி யெல்லாம் சொல்லிப் போனவர் இத்தகைய நல்ல காட்சிகளை உடைய பாலைநிலத்தின்வழியே செல்வார். அவ்வாறு செல்லும்போது அந்தக் காட்சிகளைக் காண்பவர் என்னுடைய அழகு கெடும்படி செய்ய மாட்டார்; பலரும் பாராட்டிப் பேசும் என் அழகு குலையும்படியாக அங்கே நெடுங்காலம் தங்கியிருக்க மாட்டார். இந்தக் காரணம் மட்டும் அன்று. என் துணிவுக்கு வேறு காரணங்களும் உண்டு.

தோழி: அவை எவை? பி. டி-4