பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பிடியும் களிறும்

தலைவி நல்ல சகுனங்கள் உண்டாகின்றன. நம்முடைய வீட்டில் பல்லிகள் அடிக்கடி நல்ல இடங்களிலே இசைந்து நல்ல சொல்லச் சொன்னதைக்கேட்டேன், பல முறை கேட்டேன். ஊருக்குப் போனவர்கள் திரும்பி வருவதைக் குறிப்பிக்கும் சொற்களாக இருந்தன. அவை. என் கண்ணேப் பார்த்துப் பார்த்து நல்ல கண் என்றும் எழிலையுடைய கண் என்றும் மையை உண்ட கண் என்றும் நீ பாராட்டுவாயே; அந்தக் கண்களில் இடக் கண் ஆடுகிறது. அது நல்ல நிமித்தம் அல்லவா?

என ஆங்கு இனநலம் உடைய கானம் சென்றேர் புனகலம் வாட்டுநர் அல்லர்; மன வயின் பல்லியும் பாங்குஒத்து இசைத்தன; கல்எழில் உண்கணும் ஆடுமால் இடனே.

|என்று சொல்லிய இத்தகைய நல்ல காட்சிகளை உடைய பாலை நிலத்தின் வழியே சென்ற தலைவர் பிறர் பாராட்டுதற்குரிய என் அழகை வாடச் செய்பவர் அல்லர்; நம் வீட்டில் பல்லிகளும் நல்ல இடங்களிலே பொருந்தி நல்ல நிமித்தமாகிய ஒலிகளைச் செய்தன; நல்ல அழகையுடைய மையுண்ட என் கண்களில் இடக் கண்ணும் ஆடுகின்றது.

என ஆங்கு : அசை நிலை. இனே நலம்-இத்தகைய நன்மை; இனைய நலம் என்பதன் விகாரம். கானம்-பாலே நிலம். புனை நலம்-வருணிக்கும் அழகு. வாட்டுநர்-தம் பிரிவால் வாடச் செய்பவர். மனையின்-வீட்டில். பாங்குஇடம். உண் கண்-மையுண்ட கண். மகளிருக்கு இடக் கண் துடித்தல் நல்ல நிமித்தம்.

& இனநலம் என்பதற்கு, இங்ங்னம் அவர்க்கு அருள் வந்தவை காட்டுதலின் அவர் வருந்துவதற்குக் காரண