பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பிடியும் களிறும்

மணந்து கொள்வதற்காகப் பலர் முயல்வதைப் பற்றிப் பேச்சு எழுந்தது.

"இவ்வளவு அழகும் அறிவும் உள்ள பெண்ணை மனைவி யாக அடையும் பேறு எந்த ஆடவனுக்கு இருக்கிறதோ, தெரியவில்லை' என்ருள் செவிலி.

தோழி : இனி அவளுக்கென்று புதியவகை ஒருவன் வரப்

போவதில்லை.

செவிலி : இனிமேல் பிறந்து வரப்போவதில்லை என்பது உண்மைதான். ஆனல் எங்கே பிறந்திருக்கிருனே, அதுதான் தெரியவில்லை.

தோழி : புதியவகை வரப் போவதில்லை என்றுதான்

சொன்னேன்.

செவிலி : நீ சொல்வது விளங்கவில்லையே!

தோழி : நம்முடைய தலைவியை இன்னும் சிறு பெண் என்று எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிருர்கள்.

செவிலி : அவள் சிறு பெண் தான்; ஆனல் தன் பருவத்தை

மிஞ்சிய அறிவுடையவள்.

தோழி : அதைச் சொல்ல வரவில்லை. அவள் அற்புதம்

செய்யும் வன்மை பெற்றிருக்கிருள்.

செவிலி : அற்புதமா? அது என்ன?

தோழி : இந்த நிலத்தில் சில காலமாக மழை பெய்ய .

வில்லை யென்று வைத்துக் கொள்வோம். அப்படி மழை அருமையாகப் போன காலத்தில் நாம்