பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முயற்சி 73

மழைக்கு அலமந்து வாடி வேண்டினல் அவள் மழையை வருவிக்கும் பெருமையை உடையவள்.

செவிலி : அத்தகைய ஆற்றல் இவளுக்கு எப்படி வந்தது?

தோழி : தம் காதலரையே தெய்வமெனப் போற்றும் கற்புடைய மகளிர் நினைத்தால் மழை பெய்யும் என்று பெரியோர் உரைப்பதை நீ கேட்டதில்லையா?

செவிலி : பைத்தியக்காரப் பெண்ணே, நீ என்ன உளறு. கிருய்? கற்புடைய மகளிரைப் பற்றியல்லவா சொல் லுகிருய்? இவள் கன்னிப் பெண் ஆயிற்றே!

தோழி : அல்ல, அல்ல. இவளும் அருந்ததி முதலிய - கற்புடைய மகளிரோடு சேர்த்து எண்ணுவதற்குரிய

தகுதி உடையவளாகி விட்டாள்.

செவிலி : உன் மூடு மந்திரம் எனக்கு விளங்கவில்லை.

விளக்கமாகச் சொல்.

தோழி : పోsrఉ5176Gవి: சொல்கிறேன்; உள்ளது உள்ள

படி சொல்கிறேன். சினமின்றிச் கேள்.

தோழி ஒரு கதை போலவே சொல்ல ஆரம்பித்தாள். தலைவியைத் தலைவன் இயற்கையாகச் சந்தித்தான் என்று சொல்லவில்லை அவர்கள் சந்தித்ததற்குத் தக்க காரண மாக ஒரு செய்தியைத் தானே புனைந்து சொல்லலாள்ை.

தோழி : முன்பு ஒரு நாள் பூக் கொய்வதற்காக நாங்கள்

மலைச் சாரலுக்குச் சென்ருேம். தலைவியும் நானும் மற்றத் தோழிமார்களும் சேர்ந்து விளையாட்டாகப்