பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V

விரிவாகவும் சொல்லும் நூல்கள் இப்போது இல்லை. சிலப் பதிகாரம், அதன் உரை, நச்சிஞர்க்கினியர் உரை என்ப வற்றில் வரும் செய்திகளைக் கொண்டும் பிற்கால நூல்கள் சிலவற்றைக் கொண்டும் தெரிய வரும் செய்திகளை ஒருங்கு தொகுத்து எண்ணி, எனக் குத் தோற்றிய வகையில் விளக்கியிருக்கிறேன். ஆயினும் காபாலம் என்ற கூத்தின் இலக்கணம் தெளிவாக விளங்கவில்லை.

இறைவனுடைய தத்துவத்தை எவ்வாறு தமிழ்ப் புல வர்கள் நினைத்து, அவன் கருணையை வியந்து பாராட்டு கிருர்கள் என்பதற்கு இந்தக் கடவுள் வாழ்த்துப் பாட்டு ஒரு சிறந்த உதாரணம். இறைவன் டினத்துக்கும் வாக்குக் கும் எட்டாதவன் ஆளு லும், கருணையால் திருவுருவம் பூண்டு பல அருள் விளையாடல்களை நடத்துகிருள் என் பதை அவர்கள் நன்கு தெளிந் திருத்தனர். நாம் அவன் பால் காட்டும் அன்பு மிக மிகக் குறைந்தது என்றும், அவன் நம்மிடம் வைத்த அருள் மிக மிகப் பெரியதென் றும் எண்ணி அவன் நமக்கு எளியணுக வரும் கருணையைப் பாராட்டினர்கள். கூளிகளேயும் அடியாராக்கி ஏவல் கொள்ளும் சிறப்பு இறைவனிடம் இருக்கும்போது நம் மைப் பணி கொள்வது என்ன வியப்பு? .

பாலைக்கலியிலிருந்து எடுத்த பாட்டு, பாலையின் வெம் மையினூடே காதலின் தண்மையைப் புலப்படுத்துகிறது. காதலின் ஆற்றலையும், காதலையுடையார் தம் நலம் நோக் காது தம் காதற்குரியவர்கள் நலத்தையே பேணுவதையும் விலங்குகளின்மேல் வைத் ஆச் சொல்வது பழங் கவிகளின் இயல்பு. பிடியைப் பாதுகாக்கும் களிறு, பெண் புருவைப் பேணும் ஆண் புரு, பிணைமானைக் காப்பாற்றும் கலைமான் என்னும் மூன்றும் ஈரம் வறண்ட பாலையிலும் காதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றன.

குறிஞ்சிக்கலிப்பாட்டு, தலைவனுக்கும் தல்ைவிக்கும் உள்ள காதலை தோழி வெளியிட்டு அவ்விருவரும் மணம் செய்து கொள்வதற்கு உதவி புரியும் செய்தியைச் சொல் கிறது. ஆற்றில் நீராடும்போது தலைவி நீரோடு போக, அவளே ஒரு தலைவன் காப்பாற்றிஞன் என்று சொல்லித் தோழி அவர்களிடையே உள்ள தொடர்பைப்புலப்படுத்து கிருள். இவ்வாறு கூறும் முறையை அறத்தொடு நிற்றல் என்று சொல்வார்கள். புனலிலே போன தலைவியைக்