பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முயற்சி 8i

அவர்கள் நாட்டில் பஞ்சம் வந்துவிடுமாம். உணவுப் பொருள்கள் விளையா. வள்ளிக்கிழங்கு நிலத்துக்குள் சென்று பருத்துப் பயன் தராது. மலேயின்மேல் வண்டுகள் தேன் அடையை வைக்காவாம். கொல்லே யில் தினைப்.:யிர் கதிர்விட்டு விளையாவாம். இயற்கை யாக விளையும் கிழங்கும் தேனும் இல்லாமற் போவ தோடு, உழுது பயிர்செய்த தினைகூட விளையாமல் போய்விடும். எல்லாம், கற்புடைய மகளிர் கருத்து அழியும்படி செய்வதனால் உண்டாகும் பயன்கள்.

சிறுகுடி யீரே! சிறுகுடி யீரே! வள்ளிகீழ் விழா, வரைமிசைத் தேன்தொடா; கொல்லை குரல்வாங்கி ஈளு; மலைவாழ்நர் அல்ல புரிந்து ஒழுக லான்.

(சிறுகுடியில் உள்ளவர்களே, சிறுகுடியில் உள்ளவர் வர்களே, வள்ளிக்கிழங்குகள் நிலத்துக் கடியில் பருத்து விளையா; மலையின்மேல் தேனடைகள் தொடுக்கப் பெரு: தினைக் கொல்லையில் தினைப்பயிர் கதிர்விட்டு விளையா; மலையில் வாழ்பவர்கள் அறம் அல்லாதவற்றைச் செய்து ஒழுகுவதனாலே.

சிறுகுடி-மலேப்பக்கத்து ஊர், வள்ளி - ஒருவகைக் கிழங்கு. விழா : கிழங்கு பருத்து விளை தலை வீழ்தல் என்று சொல்வது மரபு. வரை மிசை-மலேயின்மேல். தேன்-தேன் அடை. தொடா : அடுக்கடுக்காக வைப்பதனால் அதனைத் தொடுத்தல் என்று சொல்வார்கள். கொல்லை-தினை விளையும் நிலம், குரல்-கொத்து. வாங்கி-வெளிவிட்டு. ஈளு-விளையா அல்ல-அறமல்லாத பாவச் செயல்களை; தலைவனுடைய வரவை மறுத்ததைக் குறிப்பாகத் தோழி சுட்டிக் காட்டுகிருள். ஒழுகலான்-நடத்தலால்.

பி.டி.-6