பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பிடியும் களிறும்

மிக்க ஒளியினையுடைய மதி புகையால் மாசுண்ட தன்மை பற்றித் தம் கையகப்படுத்திப் பயன்கொள்ளக் கருதும் நாடன் என, புகழ் மிக்க தலைவனும் புனலிடைத் தழுவிப் போந்த தல்ை சிறிது புகழ் குறைந்தமை பற்றி யாமும் அவன் வரைந்து கொள்ளக் கருதுகின் ருேம் என உள்ளுறை யுவமம் கொள்க’ என்று நச்சிஞர்க்கினியர் எழுதுவர்.) -

தோழி இதோடு நிற்கவில்லை. தலைவன் தலைவியை மணந்து கொள்ள வேண்டித் தக்கவர்களே அனுப்பிய பொழுது தலைவியின் தமர் உடம்படவில்லை. இது அறத் துக்கு மாருனது. மகளிரது கற்பைக் காப்பாற்றுவது நல்லோர் கடமை. அக்கற்புக்கு இழுக்கு வரும்படி செய்வதினும் பழியும் பாவமும் தரும் செயல் வேறு இல்லை. அதல்ை பல தீங்குகள் நேரும். இதைத் தோழி எடுத்துரைக்க விரும்பினள். ஊரில் உள்ளார் எல்லோர் மேலும் பிழையை ஏற்றிச் சொல்லப் புகுந்தாள்.

தோழி : இந்த மலைநாட்டுச் சிறுகுடியாகிய இவ்வூரி னருக்கே சொல்கிறேன். அவர்கள் தகாத காரி யங்கள் செய்தல் கூடாது. சிறுகுடியில் உள்ளவர் களே, கேளுங்கள். மலையில் வாழும் மக்கள் அற மல்லாத செயலைச் செய்தால் வரும் கேடுகளைக் சொல்கிறேன்.

செவிலி : அறமல்லாத செயல் என்று எதனைக் கூறுகிருய்?

தோழி: நீரில் ஆழ்ந்து உயிர் போகாமல் பாதுகாத்த ஒரு தலைவருக்குத் தன் உள்ளத்தைப் பறிகொடுத்த ஒரு பெண்ணை மணம் செய்து அளிக்க மறுப்பது அற மல்லாத செயல் அல்லவா? அதற்குரிய விளைவு என்னவென்று நினைத்தாலே அச்சம் உண்டாகிறது. மலைவாழ்நர் அல்லவற்றைப் புரிந்து ஒழுகுவதல்ை