பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முயற்சி 79

ஏறும் asisgewenhaamujt மற்றவற்றையும் அமைத்து ஆயத்தமாயிருப்பார்கள்.

எவ்வளவு உயர்ந்த பொருளாக இருந்தாலும் தனக்கு அகப்பட வேண்டுமென்று விரும்புவது மனிதன் இயல்பு. இந்தத் தலைவர் எளிதிலே நமக்குக் கிடைப்பவராகத் தோன்றவில்லை. புகையுண்ட மதியத்தைப்போல அவர் நாங்கள் இருக்குமிடத்தே வந்து நீரிலே பாய்ந்தார். அந்தச் செய்கையால் அவர் நமக்கு எளியவரானர் இயல்பாக அவர் நம்மினும் உயர்குடிப் பிறந்தவரே.

அவனுந்தான், ஏனல் இதனத்து அகிற்புகை உண்டுஇயங்கும் வான்.ஊர் மதியம் வரைசேரின் அவ்வரைத் தேனின் இருல்என ஏணி இழைத்திருக்கும் கான்அகல் நாடன் மகன்.

( அந்தக் தலைவனும் தினைப்புனத்தில் உள்ள பரணில் எரித்த அகிலின் புகையில்ை மூடப்பட்டு வானில் திரியும் முழுமதியானது மலையைச் சேரும்போது அதன் அந்த மலையில் உள்ள தேன் அடையென்று எண்ணி, அவ்விடத்து மக்கள்கண்ணேணியை அமைத்து விடியட்டும் என்று காத் திருக்கிற, காடுகள் அகன்ற மலைநாட்டை உடையவன் மகன்.

அவள் இத்தகையவள் என்று முன்பு கூறி முடித்தாள். ஆகையால், அவனுந்தான் என்று உம்மை கொடுத்துச் சொல்கிருள். ஏனல்-தினை; இங்கே தினைப்புனம், இதணம்பரண். உண்டு-உண்ணப்பட்டு, மூடப்பெற்று. இயங்கும்செல்லும். மதியம்-பூர்ண சந்திரன். அவ் வரை-அந்த மலையில். தேனின் இருல்-தேன் அடை. இழைத்தல்-செய் தல். கான்-காடு.