பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முயற்சி 83

வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இதன் பேரழகு நம் கண்ணே இழுத் துத் தன்னிடம் சிக்க வைத்து விடுகிறது. இங்கே வாழும் குறமகளிருடைய அழகைத்தான் என் சொல் வேன்! வளப்பம் அமைந்த திருமேனி உடையவர் கள் அவர்கள். தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற காத லரை மணந்து வாழ்கிருர்கள். காதலர் தழுவுவத ஞல் அவர்களுடைய தோள்கள் பொலிவு பெற்று வளைந்த மூங்கிலேப் போலத் தோற்றுகின்றன; மென் மையை உடையனவாக விளங்குகின்றன. வாங்கு (வளைந்த) அமை (மூங்கில் போன்ற) மென்ருேட் குறவர் மடமகளிர் அழகுடையவராக இருப்பதற்கும், சிலம்பு (மலை) கண்ணேப் பறிக்கும் அழகுடையதாக இருப் பதற்கும் அந்த மடமகளிருடைய ஒழுக்கமேகாரணம். ஆவர்கள் தம் கணவன்மாரைத் தெய்வமாக வணங்கு பவர்கள். அவர்கள் கண்ணே விழிக்கும் பொழுதே முதல் நினைவு உண்டாகிறது. அந்த நினைவு தம் கணவரை மனத்தால் தொழும் நினைவுதான். இந்த வழக்கம் ஒரு நாள் கூடத் தவறுவதில்லை. ஒரு நாளேனும் பிழைத்தலின்றித் தம்கேள்வரைத் தொழுது எழலால் அவர்களுடைய தமையன்மார் வேட்டைக்குச் செல்லும்போது அவர்கள் விடும் அம்புகள் தவருமல் குறியை அடிக்கும் ஆற்றலைப் பெறுகின்றன. மட மகளிர்கேள்வரைத் தொழுது எழுவதில் பிழையார்; அவர் தமையன்மார் தாம் எய்யும் அம்பு குறியை அடிப்பு திலும் பிழையார்.

காந்தள் கடிகமழும் கண்வாங்கு இருஞ்சிலம்பின் வாங்கு அமை மென்தோட் குறவர் மடமகளிர் தாம்பிழையார் கேள்வர்த்தொழுதுஎழலால்;

தம்மையரும் தாம்பிழையார் தாம்தொடுத்தகோல்.