14
பிடி
பான்! வேறென்ன செய்வாள்!! வெற்றி பெற்ற வீரரிடம். அவனோர் வேலைக்காரன். சரணடைந்த சாளுக்கியன் தன் தாய்நாடு சாம்பலானதைக் கண்டவன்!
பரஞ்ஜோதியின் ஆற்றலை, வாதாபியின் வீழ்ச்சி, தமிழகம் உணரச் செய்தது. நரசிம்மப் பல்லவனின் கீர்த்தி, பல்லவ சாம்ராஜ்யத்தின் சிறப்பு, இவைகளைப் பற்றி மக்கள் பேசாமலில்லை. பெருமை அடையாமலுமில்லை. ஆனால், பரஞ்ஜோதியைப் பற்றிப் பேசியான பிறகுதான்!
பரஞ்ஜோதியின் புகழ் வளர்வது கண்டு, சாளுக்கியன், ஏற்கெனவே வேதனைப் பட்டதைவிட அதிகமாக அனுபவித்தது சகஜம். ஆனால், பரஞ்ஜோதியின் புகழ் வளருவதுகண்டு பல்லவ சாம்ராஜ்யத்திலேயே வேறுசிலருக்கு வேதனை பிறந்தது. அவர்கள், பரஞ்ஜோதிபோல, படைத் தளபதிகளுமல்ல—புகழுக்காகப் போட்டியிடுபவர்களுக்குள் உண்டாகும் மாச்சரியம் என்ற அளவிலே கருதலாம். ஆனால், பரஞ்ஜோதியின் புகழ் ஒளி கண்டு, வேதனைப்பட்டவர்கள், வீரர்களல்ல!
பல்லவ சாம்ராஜ்யம், பல்வேறு வளங்ளுடன் சிறந்து விளிங்கிற்று. செல்வம் செழித்த இடம் கலையும் ஓங்கி வளர்ந்திருந்தது. மன்னன் நரசிம்மன், வைணவன்—ஆனால். சைவரின் பகைவனல்ல!
சைவம்—வைணவம் இரண்டும் வெளிப்படையாக ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டு, ஊரை கவமாக்கிய காலமல்ல அது, அந்தக் கோரம் குறைந்துவிட்டது. குறைய வேண்டிய அளவு, வேறோர் மார்க்கம். இரண்டையும் அறைகூவி அழைத்தது. அந்த மார்க்கமே, சமணம், சமணத்தின் ஆதிக்கத்தைக் கண்டு, வைணவமும் சைவமும் அஞ்சின—அஞ்சினதுடன், இரு சக்திகளும், கூட்டுச் சக்தியானாலொழிய, சமணத்தை வீழ்த்த முடியாது என்று முடிவு செய்தன. எனவே தான் சைவ—வைணவ், மாச்சரியம் குறைந்தது. அரியும், அரனும் ஒன்றுதானென்று பேசப்பட்டு வந்தது. இருமார்க்கங்களும், இறைவனின் திருவடிகளுக்கே அழைத்துச் செல்ல