30
பிடி
கூசுகிறேன் மன்னவா! எல்லையற்ற பரம் பொருளின் பக்தனை, இழி தொழிலில் புகுத்தும் பாபம், உன்னைச் சும்மா விடாது!
மதலைக்கு மதுவினைத் தருபவள் தாயல்ல, பேய்! மகேந்திரன் மகனே! மாசிலாமணியாம் ஈசனார்க்குத் தொண்டராக உள்ள பரஞ்சோதியை, ‘வெட்டு குத்து’ வேலைக்கு அனுப்பும் உன்னைக் கண்டு, உலகின் முதல்வன், கோபிக்கிறான்—சபித்திட முடிவு செய்துள்ளான்.
நீ வெற்றி பல பெறுவதற்காக, உன் கீர்த்தி பரவுவதற்காக, உன் ராஜ்யம் வளர்வதற்காக, உன் எதிரிகளை ஒழிப்பதற்காக, பரஞ்ஜோதியை-பக்தனை—சிவத் தொண்டனை வேலை வாங்குகிறார்—பசுவைக் கொன்று தின்பது போன்ற பாபக்கிருத்யம் அது—வேண்டாம், பல்லவ குலாதிபா! பராக்கிரமம் உனக்கு இருந்தால், போரிலே நீ வெற்றி பெறு, இரவல் கேட்காதே—அதிலும் இறைவன்பால் தொண்டு செய்யும் எமது பரஞ்ஜோதியைப் பாழ்படுத்தி, வெற்றியை நாடாதே.
உண்மையை உன் உள்ளம், உணரவில்லையா! உன் தகப்பன் மகேந்திரன் சாளுக்கியனிடம் தோற்றான்—வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பரஞ்ஜோதியுடையதல்ல, உன் பொறுப்பு! தவறினாய்! தயாபரனின் தொண்டனைத் தவறான பாதையிலே திருப்பினாய்.
என்ன யோசிக்கிறாய்! பரஞ்ஜோதி இல்லாப் பல்லவநாடு, நீரில்லா ஆறாகுமென்றா? பேஷ்! இதற்கு நீ ஏன் பல்லவ மன்னன் என்ற பட்டத்தைச் சுமக்கிறாய், பட்டம் உனக்கு; அரசபீடம் உனக்கு! கஷ்டமும், நஷ்டமும் பரஞ்ஜோதிக்கா! கைலைவாசன் உன்னைக் கேட்கிறான், முற்றிடா முன்னம், பழிவழியைவிட்டு நேர்வழி நடந்து, பாபத்தைப் போக்கிக்கொள். பரஞ்ஜோதியைச் சிறையிலிருந்து விடுதலை செய்—உன் அரண்மனை அவனுக்குச் சிறைதான்; சந்தேகம் இல்லை. நீ தரும் அந்தஸ்து—பொன்விலங்கு; வேண்டாம் அவை. விடுதலை செய், விமோசனம் வேண்டு-