உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாம்பல்‌

31

மானால் படைக்கு வேறு தலைவனைத் தேடு—பரஞ்ஜோதிக்கு வேலை இருக்கிறது, ஊர் கொளுத்துவது அல்ல அவன் வேலை.

ஊராள நீ! ஊர்பிடிக்க பரஞ்ஜோதி! பல்லவனே! இது உன் பரம்பரை நியாயமோ? வீரர் வழி வந்தவனே, விடுதலை செய். இல்லையேல், விண்ணவன் விடும் சாபம் உன்னையும், உன் பின் சந்ததியையும் இலேசாய்விடாது.

மேனி எல்லாம் திருநீறணிந்த அந்தச் சாது, மிக்க சீற்றத்தோடு, பேசினார் இதுபோல—பேசினாரா—கட்டளை பிறப்பித்தார்—கைலைநாதன் மீது ஆணையிட்டுக் கூறினார். காவலன் துளியும் பதறாமல், சீறாமல் அவர் உரையைக் கேட்டுக் கொண்டான்—இடையிடையே புன்சிரிப்புடன்.

மன்னன் கோபிக்குமளவு, கடுஞ்சொற்களை வீசிய காவி அணிந்தோர், புயலை எதிர்பார்த்து ஏமாந்தார். மன்னனைத் தன் கேலி மொழியால், கோபப் பார்வையால், ஆர்ப்பரிப்பால், தாக்கினான். குன்றெடுக்கும் நெடுந்தோளனாகிய நரசிம்மப் பல்லவன், சாந்தத்துடன் வீற்றிருந்தார்—குறுக்குக் கேள்வி—கோபக்குறி—வெறுப்பு—ஏதுமின்றி கேட்டுக் கொண்டார், வசை மொழிகளை.

மன்னனின் போக்குக் கண்டு, சாதுவுக்குக் கடுங்கோபமே பிறந்தது.

“நாடாளும் உன்னை நேரிலே, வாயில் வந்தபடி ஏசுகிறேன். அவமதிப்பாகவே பேசுகிறேன்! ஆடாமல் அசையாமல், பதறாமல், சீறாமல், அவ்வளவையும் கேட்டுக் கொள்கிறாயே—ஏன் கோபிக்க மறுக்கிறாய்—ஏன் என்னைத் தண்டிக்காமலிருக்கிறாய்—வா, போருக்கு!” என்று, மன்னனை மல்லுக்கு இழுத்தது, அந்தச் சாதுவின் பார்வை! அவன், உண்மைச் சாதுவாக இருந்தால்தானே! அவனுடைய அன்றையப் போக்கு ஆச்சரியமூட்டுவதாகக் கருதலாம்—அவன் சாளுக்கியன்—சாதுவல்ல! சாதுபோல வேடமணிந்து வந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/31&oldid=1765277" இலிருந்து மீள்விக்கப்பட்டது