36
பிடி
என்று நகரெங்கும் முழக்கம். மன்னனின் கனவிலே ஈசன் பிரத்யட்சமாகி இட்ட கட்டளையாம் என்று தெளிவற்றவர்கள் பேசினர். அதுவே நகரெங்கும் பரவி விட்டது—பகுத்தறியக்கூடியவர்கள், இதைத் தடுக்க முடியவில்லை.
பரஞ்ஜோதியார் தமது மாளிகை சென்றார் மனவாட்டத்துடன்.
மன்னன் மதிமிக்கவன்! எதிர்பார்த்ததைவிட, அதிகத் திறமையாகவே காரியத்தைக் காவலன் முடித்துவிட்டான். சைவத்தவ வேடதாரியின் மொழி கேட்டு, மன்னன் மிரண்டே போனான் போலும். உண்மையிலேயே பழியும் பாவமும் தன்னைப் பற்றிக் கொள்ளும் என்று கருதினானோ என்று வைணவமார்க்கத்தவர் பேசிக் கொண்டனர்—சைவத்துக்கு, அரச அவையிலும் அதன் மூலம் நாடெங்கும் ஏற்பட்ட செல்வாக்கு இனிச் சிதைந்தொழியும் என்று எண்ணி மகிழ்ந்தனர். வைணவத்துக்கு நேரிட இருந்த விபத்து, தவிர்க்கப்பட்டது என்று களித்தனர்.
சிவபக்தன், ஆகவே சேனாதிபதியாக இருக்கக்கூடாது. இருப்பது மகாபாவம் என்று மன்னர் கூறுகிறார். எதிரிகளை ஒழித்தவன், இணையில்லாப் போர்வீரன், படைகளை நடத்திச் செல்வதிலே, திறமைமிக்கோன், இனி இவனால் பல்லவ சாம்ராஜ்யத்தின் புகழ் திக்கெட்டும் பரவும் என்று மக்கள் பூரிப்புடன் பேசிக் கொண்டனர். மன்னனோ! பொன்னும், பொருளும், பூமியும் கொடுத்து, வாளையும் கேடயத்தையும் பறித்துக் கொண்டான். ஏன்? என்ன நோக்கம்? சிவத்தொண்டு புரியத்தான் வேண்டும். ஆமாம், நானே அதனை அறிந்துதான் இருக்கிறேன். அத்தொண்டு செய்வதற்கும், நாட்டைக் காத்திடும் நற்தொண்டு புரிவதற்கும் எப்படி முரண் வந்து சேரும்.
என் ஐயன், எதிர்த்தோரை அழிக்காமல் விட்டவனல்லவே! திரிபுராந்தகனல்லவோ! அவர் அடியவனாம் நான், போர்த் தொழிலில் ஈடுபடுவது, சிவ நெறிக்குத் தகுதியல்ல என்றார் மன்னர்! என் செவியில் அச்சொல் வீழ்ந்தபோது,